நாகையில் ஆக்கிரமிப்பு வீட்டை இடிக்க கடும் எதிர்ப்பு.. ஜேசிபியை கட்டிப்பிடித்து கதறி அழுத பெண்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் காருக்குடியில் தலைமுறை தலைமுறையாக இருந்த வீட்டை கோர்ட் உத்தரவுப்படி அப்பறப்படுத்த வந்த ஜேசிபி இயந்திரத்தை கட்டிப்பிடித்தபடி இடிக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்த பெண்ணால் பரப்பரப்பு ஏற்பட்டது. தருமபுரம் ஆதினம் கட்டுப்பாட்டில் உள்ள திருக்குவளை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தனலெட்சுமி - பாலு வீடு கட்டி வரும் நிலையில், ஊராட்சி குளத்திற்கு பொது பாதை கேட்பதால் இடிக்க முடிவு செய்தனர். அதற்கு தான் தம்பதி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு எப்போது வேண்டுமானாலும் சிக்கல் வரலாம். அதேபோல் பொதுப்பாதையை ஆக்கிரமித்து குடியிருப்போருக்கும், ரயில்வே நிலத்தில் குடியிருப்போருக்கும் சிக்கல் வர அதிக வாய்ப்பு உள்ளது. அவர்கள் அங்கு நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்த முடியாது. குடியிருக்கும் இடம் அவர்களுக்கு சொந்தமாகாது.

உணர்ச்சி பூர்வமாக நடந்து கொள்வதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே இதுபோன்ற நிலங்களை இனி வாங்காமல் இருப்பதே நல்லது. ஏனெனில் அண்மை காலங்களில் நிலத்தின் மதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அரசு நிலங்களை பாதுகாக்க, ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதில் தீவிரமாக இருக்கிறது. பெரும்பாலும் நீதிமன்ற உத்தரவின் படியே நடக்கிறது. எனவே என்ன தான் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தாலும், அகற்றிவிடுவார்கள் என்பதே நிதர்சனம். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த காருக்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் பாலு தனலெட்சுமி. இவர்கள் தலைமுறை தலைமுறையாக தருமபுரம் ஆதினம் கட்டுப்பாட்டில் உள்ள திருக்குவளை கோவிலுக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில் கூரை வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும் தற்போது ஆதினம் அனுமதியோடு புதிதாக மாடி வீடும் கட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருக்குவளையில் உள்ள குளத்திற்கு செல்ல பொது பாதை வேண்டும் என்பதற்காக பாலு தனலெட்சுமியின் வீட்டை அகற்ற முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் அவர்களின் பயன்பாட்டில் உள்ள இடத்தில் 90 குழி இடத்தை ஒதுக்கிவிட்டு மீதி இடத்தை பொது பாதைக்கு எடுத்துக் கொள்ள தீர்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்துறையினர் கீழையூர் காவல் ஆய்வாளர் செங்குட்டவன் தலைமையில் போலிசார் பாதுகாப்போடு இடத்தை அளந்து கூரை வீட்டை அப்புறப்படுத்த ஜேசிபி இயந்திரத்தோடு வருகை தந்தனர். கூரை வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்த முயன்ற போது அவர்களை வீட்டுக்குள் விடாமல் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வீட்டை இடிக்க முற்பட்ட போது ஜேசிபி இயந்திரத்தை மறைத்து கட்டிபிடித்தபடி கூச்சல் போட்டு இடிக்க விடாமல் தடுதததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications