ஜீன்ஸ்..ஒரே மாதிரி இருக்கலாம் படிக்க முடியுமா? பிளஸ் 2 தேர்வில் ஒரே மதிப்பெண்களை எடுத்த ட்வின்ஸ்!
நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர். பஞ்சநதிக்குளம் மேற்கு விக்டரி மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த நிகிலும், நிர்மலும் தான் இப்படி அதிசயிக்க வைத்துள்ளனர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தின் கீழ் ப்ளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் மாணவர்களை விட மாணவியர்களே அதிகளவில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிவு: 4,08,440 மாணவிகளும், மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 165 மாணவர்களும் அடங்குவர். ஒரு மூன்றாம் மாநில பாலினத்தவர் தேர்வு எழுதி, வெற்றி பெற்று இருக்கிறார். இது மட்டும் அல்லாமல் ஏழ்மையிலும் நம்பிக்கையுடன் படித்த பல மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். அவர்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஆனால் இதுவரை இல்லாத வகையில் சுவாரசிய சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.
இரட்டையர்கள்: அந்த வகையில் வேதாரண்யம் அருகே +2 தேர்வில் இரட்டையர்கள் இருவரும் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பா (விவசாயி) இவரது மனைவி சவிதா இவர்களுக்கு கடந்த 2007ஆம் ஆண்டு நிர்மல், நிகில் என்ற இரட்டை குழந்தை பிறந்தது.
ஒரே மதிப்பெண்: இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் விக்டரி மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரே வகுப்பில் படித்தனர். நேற்று 12ஆம் வகுப்பு போது தேர்வு வெளிவந்த நிலையில் கணக்கு பாடப்பிரிவு எடுத்து படித்த இந்த இரட்டையர்கள் இருவரும் 478 மதிப்பெண்கள் பெற்றனர். இந்த தகவல் கிடைத்ததும் மாணவர்களும் அவர்களது உறவினர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பெற்றோர் மகிழ்ச்சி: ஒன்றாக பிறந்த இரட்டையர்கள் உருவத்திலும், செயலிலும் ஒன்றாக செயல்படுவர் என்பது பொதுவான கருத்து . அதற்கு ஒருபடி மேலாக இந்த இரட்டை சகோதரர்கள் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஒரே மதிப்பெண் பெற்றதால் இந்த இரட்டை சகோதரர்கள் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications