Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது தான் சார் உண்மையான காதல்! 40 நாளில் கல்யாணம்! காலமான காதலனின் பெற்றோருக்கு மகளான மருமகள்!

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம் : நாகை அருகே 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இளைஞர் திருமணத்திற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னால் உயிரிழந்த நிலையில் அவரது தாய் தந்தையரை ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்த பெண்ணே தனது பெற்றோராக கருதி பராமரித்து வரும் நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே பிரதாபராமபுரம் பகுதியை சேர்ந்தவரான கோவிந்தராஜ் பத்மாவதி தம்பதியினருக்கு வெங்கடேசன் சபரி கிருஷ்ணன் சந்தோஷ் பாபு என மூன்று மகன்கள் இருந்தனர்..

மூத்த மகனான வெங்கடேசனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று அவர் தனியாக வசித்து வரும் நிலையில் இரண்டாவது மகனான சபரி கிருஷ்ணன் மின்வாரிய அலுவலகத்தில் கேன் மேனாக பணியாற்றி வந்துள்ளார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

சபரி கிருஷ்ணனும் அவரது உறவினரான மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியை சேர்ந்த ஜெயா - மோஹன் தம்பதியினரின் மகள் ரேவதியும், சபரி கிருஷ்ணன் ஆகியோரும் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரிய வந்த நிலையில் சபரி கிருஷ்ணன் நடத்தை மற்றும் வேலை காரணமாக அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

திடீர் மரணம்

திடீர் மரணம்

இதை அடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகளை இருவரது குடும்பத்தினரும் தீவிரமாக செய்து வந்த நிலையில் தான் எதிர்பாராத அந்த சம்பவம் நடைபெற்றது. 10 ஆண்டுகள் காதலித்து தங்களது இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கலாம் என ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

காதலி செய்த செயல்

காதலி செய்த செயல்

நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதி மின் கம்பிகளில் உரசிய மர கிளைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி சபரி கிருஷ்ணன் உயிரிழந்தார் இந்த சம்பவம் இரு குடும்பத்தினரையும் அவரது காதலியான ரேவதியையும் புரட்டிப் போட்டது. தனது காதலரும் வருங்கால கணவருமான சபரி கிருஷ்ணனை மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் ரேவதி

சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சி

சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சி

ஆனாலும் ரேவதி தனது சோகத்தை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவரது பெற்றோர்களுக்கு ஆதரவாக இருக்க முடிவெடுத்துள்ளார். இதனால் தனது வீட்டில் இருந்து வந்த ரேவதி, காதல் கணவரின் நினைவாக தனது வயதான மாமியார் மாமனாருக்கு பணிவடைகள் செய்து, காதல் கணவரின் நினைவாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் அல்ல இரு நாள் அல்ல கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக தனது காதலனின் வீட்டியிலேயே தங்கியிருக்கும் ரேவதி, சபரியின் பெற்றோருக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்து வருகிறார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+