நம்ம ஊரு இனி மாநகராட்சி.. நாகர்கோவில் மக்கள் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நாகர்கோவில் மக்கள் ரொம்ப ஹேப்பி-வீடியோ

    நாகர்கோவில்: நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படவுள்ளது குறித்து நாகர்கோவில் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை இன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசிற்கும் தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    nagercoil people feels happy about the city upgradation

    கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகராட்சியாக இருந்து வந்தது. 52 வார்டுகளை கொண்டதும் அதிகமான வரிவசூல் கொண்டு தமிழகத்திலேயே முதன்மை நகராட்சியாக இருந்து வந்த நாகர்கோவில் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என குமரி மாவட்ட மக்கள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நாகர்கோவிலில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக இன்று சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    nagercoil people feels happy about the city upgradation

    தமிழக அரசின் இந்த அறிவிப்பு நாகர்கோவிலில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் அறிவிப்பு தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்த பொதுமக்கள் இந்த அறிவிப்பை கொடுத்த தமிழக அரசு, முதல்வர், துறை அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+