Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுநடுங்க வைக்கும் "ஹோமோ".. பெட்ரூமில் சடலமாக விழுந்து கிடந்த சப்ளையர்.. நாகர்கோவிலில் பயங்கரம்

நாகர்கோவில் ஓட்டல் சப்ளையர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: வீட்டில் தனியாக இருந்த நபரை மிக கொடூரமாக கழுத்தை அறுத்து யாரோ கொலை செய்திருக்கிறார்கள்.. அவர்களை பிடிக்க நாகர்கோவில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.

நாகர்கோவில் சரக்கல்விளை பார்க் தெரு பகுதியில் வசித்து வந்தவர் சுகுமாறன்.. 58 வயதாகிறது.. இன்னும் இவருக்கு கல்யாணமாகவில்லை.. ஒரு ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார்.. அத்துடன் வட்டிக்கு பணம் தந்தும் சம்பாதித்து வந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவரை யாரோ கொலை செய்துள்ளனர்.. அந்த வீட்டில் தனியாகத்தான் சுகுமாறன் வசித்து வந்துள்ளார்.. பெட்ரூமில் அவரது சடலம் விழுந்து கிடந்தது.. கழுத்து அறுக்கப்பட்டுள்ளது.. முகத்தையும் தலைகாணியால் அழுத்தி கொலை செய்து இருந்தனர்.

 தனிப்படை

தனிப்படை

இந்த தகவல் கோட்டார் போலீசாருக்கு சென்றதுமே, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.. எந்த துப்பும் இதில் கிடைக்காததால், உடனடியாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.. சப்ளையராக இருந்தாலும், சுகுமாறன் உடம்பெல்லாம் நகை போட்டிருப்பாராம்.. கழுத்தில் செயின், பிரேஸ் லேட், மோதிரம் மொத்தத்தையும் திருடி கொண்டு போயுள்ளனர்.. அவரது பைக்கையும் காணவில்லை.. ஒருவேளை இது நகை, பொருட்களுக்காக நடந்த கொலையா என்ற கோணத்தில் விசாரணை துவங்கியது.

 4 இளைஞர்கள்

4 இளைஞர்கள்

ஆனால், அப்போதுதுதான், ஓரின சேர்க்கை கும்பல் அடிக்கடி சுகுமாறன் வீட்டுக்கு வந்து போன தகவல் தனிப்படை போலீசாருக்கு கிடைத்தது.. அது, தொடர்பான பிரச்னையில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.. இது தொடர்பாக கோட்டார் பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்யாணம்

கல்யாணம்

சுகுமாறனுக்கு உடன்பிறந்தவர்கள் இருந்தாலும், யாருடனும் சுகுமாறன் தொடர்பில் இல்லை.. இவரது நடத்தை பிடிக்காததால், இவருடன் குடும்பத்தார் பேசுவது கிடையாதாம்.. கல்யாணமும் செய்து கொள்ளாமல், விருப்பம்போல வாழ்ந்திருக்கிறார் சுகுமாறன்.. சப்ளையர் வேலைதான் ரொம்ப நாளாக பார்த்து வந்துள்ளார்.. இவர் ஒருநாள் விபத்தில் சிக்கிவிட்டாராம்.

இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ்

அதனால், அவருக்கு இன்சூரன்ஸ் பணம் வந்திருக்கிறது.. அந்த பணத்தைதான் வட்டிக்கு தந்து வந்துள்ளார்.. அதில்தான் நகை வாங்கி போட்டுக் கொண்டார்.. பைக் வாங்கி இருக்கிறார்.. அதனால் கொலை செய்தவர்கள் நகை, பணத்துக்காக கொன்றார்களா? அல்லது ஓரின சேர்க்கை தொடர்பால் ஏதாவது தகராறு வந்து கொலை செய்தார்களா என்று தெரியவில்லை.

 வட்டி பணம்

வட்டி பணம்

சுகுமாரனிடம் வட்டிக்கு பணம் வாங்குவதற்காக ஒருவர் அவருடைய வீட்டுக்கு சென்றுள்ளார்... அப்போது வீடு திறந்தே கிடந்துள்ளது... உள்ளே நுழைந்து பார்த்தபோதுதான், சுகுமாரன் ரத்த வெள்ளத்தில் பெட்ரூமில் பிணமாக கிடந்துள்ளார்... வட்டிக்கு பணம் வாங்க வந்த நபர், இதை பார்த்து அலறி அடித்து கொண்டு வந்து, அப்பகுதியில் உள்ளவர்களிடம் சொல்லவும், அவர்கள்தான் போலீசாருக்கு தகவல் தந்துள்ளனர்.

 பரபரப்பு

பரபரப்பு

இப்போதைக்கு சிக்கி உள்ள அந்த 4 பேரிடம் விசாரணை நடக்கிறது.. வேறு யாராவது இளைஞர்கள் சுகுமாறன் வீட்டுக்கு வந்து போனார்களா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.. அடுத்தடுத்த தகவல்கள் இது தொடர்பாக வெளியாகி வருவதால், நாகர்கோவிலில் இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+