அரபிக் கடலில் மாயமான குமரி மீனவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு
Recommended Video
நாகர்கோவில்: புயல் எச்சரிக்கை தகவல் தெரியாமல் அரபி கடலில் மீன் பிடிக்க சென்ற போது மாயமான குமரி மாவட்ட மீனவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளது.
கடலில் மாயமான மீனவர்களின் எண்ணிக்கை 78 லிருந்து 93 ஆக உயர்ந்து உள்ளதாக தெற்காசிய மீனவ கூட்டமைப்பினர் அதிர்ச்சி தகவலை அரசுக்கு தெரிவித்து உள்ளனர். ஓக்கி புயலில் புயலில் கடலில் உயிருக்கு போராடிய மீனவர்களை மீட்பதில் இருந்தது போலவே இப்போதும் மெத்தனம் காட்டப்படுவதாக மீனவ அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துரை வள்ளவிளை, தூத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் அதிக நாட்கள் தங்கி இருந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 30 நாட்களுக்கு மேல் இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிப்பது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் இதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கடந்த 7 நாட்களுக்கு முன் கோவா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரபிக்கடலில் கியார் புயல் உருவாகி இதுதொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அரபி கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்த ஏராளமான விசைப்படகு மீனவர்கள் குஜராத், மும்பை, கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கரை சேர்ந்துள்ளனர். இந்நிலையில் புயல் எச்சரிக்கை தகவல் தெரியாமல் அரபி கடலில் மீன் பிடிக்க சென்ற போது மாயமான 6 படகுகளும் 78 மீனவர்களும் கடலில் மாயமான நிலையில் உள்ளனர்.
கடலில் மாயமான மீனவர்களின் எண்ணிக்கை 78 லிருந்து 93 ஆக உயர்ந்து உள்ளதாக தெற்காசிய மீனவ கூட்டமைப்பினர் அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தி உள்ளனர். இவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications