வண்டி மாடு எட்டு வச்சு.. முன்னே போகுதம்மா.. மாட்டு வண்டியில் கல்யாணத்துக்கு வந்த மாப்பிள்ளை!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மாட்டு வண்டியில் திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்ட மாப்பிள்ளை-வீடியோ

    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் மாப்பிள்ளை ஒருவர் மாட்டு வண்டியில் திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

    முன்பெல்லாம் திருமணம் என்றால் மிக மிக எளிமையாக நடைபெறும். மிஞ்சிப் போனால், தடபுடல் ஏற்பாடுகள் இருக்குமே தவிர வித்தியாசம் என்ற பெயரில் எதுவுமே பெரிய அளவில் இருக்காது. ஆனால் இப்போதெல்லாம் வித்தியாசமாக திருமணங்களை நடத்துவது ஒரு டிரண்டாகி வருகிறது.

    bullock cart procession in kulasekaram marriage

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே மாஞ்சக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜெபசாலமோன் என்ற இளைஞர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஆஞ்சலா மெர்ஷி என்ற பெண்ணிற்கும் மாஞ்சாக்கோணம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.

    முன்னதாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் மூலம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரும்புகை மற்றும் மாசு கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது இல்லத்தில் இருந்து மணமகன் திருமண மண்டபத்திற்கு மாட்டுவண்டியில் வந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    மேலும் சமூக சிந்தனையுடன் தமிழர்களின் பண்டைய பாரம்பரியத்தை நினைவு படுத்தும் விதமாக மாட்டு வண்டியில் வந்த மணமகனுக்கு அப்பகுதி மக்கள் மிகுந்த உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+