நீண்ட இடைவெளிக்குப் பின் பளிச் சூரியன்.. பரவச உதயம்.. குமரியில் சுற்றுலாப் பயணிகள் ஹேப்பி
Recommended Video
நாகர்கோவில்: நீண்ட நாட்களுக்கு பிறகு பிரகாசித்த சூரிய உதயத்தைக் கண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர் சுற்றுலா பயணிகள்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.

கன்னியாகுமரியில் ஒரே இடத்திலிருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமத்தை காணமுடியும் என்பதால் இங்கு தினமும் அதிகாலை முதலே சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும்.
கடந்த சில நாட்களாகவே சூரிய உதயம் தெளிவாகத் தெரியவில்லை. மேகமூட்டம் இருந்ததே இதற்குக் காரணம். இந்நிலையில் இன்று அதிகாலையில் சூரிய உதயத்தை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம பகுதியில் சுற்றுலாப்பயணிகள் கூடினர்.
இன்று நீண்டநாளுக்குப் பிறகு மேகமூட்டம் இல்லாத காரணத்தால் சூரிய உதயம் தெளிவாக தெரிந்தது. இதனை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர்.
அப்போது அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதனால் அதிகாலையிலேயே கன்னியாகுமரியில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications