குழப்புவாங்க.. குழம்பாதீங்க.. ஏமாத்துவாங்க.. ஏமாறாதீங்க.. தினகரன் பலே பேச்சு
Recommended Video

நாகர்கோவில்: தமிழகத்தை புறக்கணித்த மோடி மற்றும் பா.ஜ.க.வுடன் வாழ்நாளில் கூட்டணி கிடையாது எனவும், இந்தியாவின் பிரதமரை தீர்மானிக்கின்ற சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தேசிய கட்சிகளிடம் தமிழக மக்கள் ஏமாறாதீர்கள். ஜாதி, மதங்களை மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் நலன்களை மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் எனவும் தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் கலந்து கொண்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் டி.டி.வி., தினகரன் பேசினா்ா. அவரது பேச்சிலிருந்து...

உருப்படாத கூட்டணிகள்
மோடியை டாடி என சொல்கின்ற எடப்பாடி, பன்னீர் கம்பெனி கூட்டணி வைத்துள்ளார்கள். மற்றொரு கூட்டணி மதசார்பற்ற கூட்டணி. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவோம் என்கிறார். அந்த கூட்டணி கட்சியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியே அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

பிரதமராக அறிவிக்காத கம்யூ
கேரளத்தில் ராகுல் போட்டியிடுகிறார். அவரை தோற்கடிக்காமல் விடமாட்டேன் என்று பினராயி விஜயன் கூறுகிறார். காங்கிரஸ் கட்சியே ராகுலை பிரதமராக அறிவித்ததாக தெரியவில்லை. எதையாவது செய்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிடவேண்டும் என நினைக்கிறார்கள்.

டெபாசிட் போன திமு
முக்கிய துறைகளை வைத்திருந்த திமுக சொந்த மக்களை மட்டுமே பார்த்துக்கொண்டது. சிறுபான்மை மக்களின் பாதுகாவலர்கள் என கூறியவர்களை சிறுபான்மையினர் புறக்கணித்ததால் ஆர்.கே.நகரில் டெப்பாசிட் போனது. தமிழகத்தை புறக்கணித்த மோடி மற்றும் பா.ஜ.க.வுடன் வாழ்நாளில் கூட்டணி கிடையாது என கூறுகிறோம். இதை ஸ்டாலின் கூற முடியுமா.

ஸ்டாலினுக்கு தைரியம் உண்டா
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கமாட்டேன் என அறிவிப்பாரா. தேசிய கட்சிகளை நம்பி ஏமாறவேண்டாம். தமிழர்கள் தலைநிமிர, சிறுபான்மை மக்கள் நலனுக்காக, எந்த மொழி பேசுபவர்களாக இருந்தாலும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள கட்சி அ.ம.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வேட்பாகரை நிறுத்தி 37 தொகுதிகளிலும் வெற்றிபெறபோகும் கட்சி எது என நீங்கள் முடிவு செய்யுங்கள்.

குழப்பம் வேண்டாம்
அமமுக இந்திய பிரதமரை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள். ஜாதி, சிறுபான்மை பெரும்பான்மை கடந்து வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். உங்களை சிலர் குழப்புவார்கள் நீங்கள் குழம்ப வேண்டாம். பொறியாளர்களுக்கு வேலை, ரப்பர் பூங்கா, மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படும். பெட்டக துறைமுகத்தை தேர்தல் அறிக்கையிலேயே எதிர்க்கிறோம். வரவிடாமல் தடுக்க நாங்கள் போராடுவோம். சென்னை முதல் குமரி வரை கிளைகள் இல்லாத ஊர்களே இல்லை.

மக்களே ஏமாறாதீர்கள்
எங்களுக்கு சின்னம் கொடுக்க மோடி அரசு இடைஞ்சல் கொடுத்தார்கள். நீதிமன்றம் மூலம் கிடைத்தது பரிசு பெட்டகம். தேசிய கட்சிகளிடம் ஏமாறாதீர்கள். மதங்களை மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் நலன்களை மனதில் கொள்ள வேண்டும் எனவும் அவர் பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications