தூங்கிய பெண்ணை டார்ச் லைட் அடித்துப் பார்த்த இளைஞர்.. தட்டிக் கேட்ட கணவர் வெட்டிக் கொலை
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியில் மனைவி மீது டார்ச் அடித்து பார்த்ததை தட்டிக் கேட்ட மீனவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர சம்பவம் தொடர்பாக 10 பேர் கொண்ட கும்பலை போலிசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே மேலமணக்குடி கடற்கரை கிராமம் லூர்து நகரை சேர்ந்தவர் வின்சென்ட் வயது 34. மீன்பிடி தொழில் செய்து வந்த இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் வீட்டின் வெளியே தூங்கி கொண்டிருந்த போது சாலையில் சென்ற கீழமணக்குடி பகுதியை சேர்ந்த கிதியோன் என்பவர், வின்சென்ட் மனைவி மீது டார்ச் லைட் அடித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் வின்சென்ட்.
ஏன் என் மனைவி மீது டார்ச் லைட் அடித்துப் பார்த்தாய் என்று தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிதியோன் தனது நண்பர்களை அழைத்து வந்து வின்சென்ட்-ஐ கடுமையாக தாக்கி அரிவாளால் வெட்டியதாக கூறபடுகிறது.
இதில் பலத்த காயமடைந்த வின்சென்ட் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications