பசுமை நிறைந்த நினைவுகளே... 24 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து மகிழ்ந்த மாணவர்கள்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பள்ளியில் 1996 ஆம் ஆண்டு பயின்ற மாணவ மாணவிகள் 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் சந்தித்து தங்கள் நட்பை வளர்த்து கொண்டனர்.
கடல் கடந்து வந்து தங்களது பழைய நட்பை வளர்த்த மாணவ மாணவிகள் தங்களை உயர்ந்த நிலைக்கு ஆளாக்கிய தங்கள் ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்றதோடு தங்கள் குடும்பத்தினரையும் அறிமுகப்படுத்தி வைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

படித்ததோடு ஆசிரியர்களை மறந்து விடும் மாணவர்கள் மத்தியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் வாழ்த்து பெற்ற மாணவ மாணவிகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணபதி புரம் கிராமத்தில் அமைந்துள்ளது அன்ன விநாயகர் அரசு மேல்நிலை பள்ளி, இந்த பள்ளியில் கடந்த 1996 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் 24 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் சந்தித்து தங்கள் நட்பை வளர்த்து கொண்டனர்.

கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் நண்பர்களை தொடர்பு கொண்ட மாணவ மாணவிகள் தங்கள் அனைவரும் கடைசியாக படித்து பிரிந்து சென்ற அதே வகுப்பறையில் ஒன்று சேர வேண்டும் என திட்டமிட்டனர். இதற்காக ஒரு நாள் குறிக்கப்பட்டு இன்று அனைவரும் ஒரே இடத்தில் சந்தித்தனர்.
24 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்த தங்கள் நண்பர்கள் அவர்களது குடும்பத்தினர் குழந்தைகளை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினார். மேலும் தங்களுக்கு பாடம் கற்று கொடுத்து தங்களை உயர்ந்த நிலைக்கு ஆளாக்கிய ஆசிரியர்களுக்கு மலர்கள் கொடுத்து வரவேற்ற மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இது தங்கள் வாழ்வில் மிகப்பெரிய அனுபவம் என தெரிவித்த மாணவ மாணவிகள் தங்கள் நண்பர்களையும் ஆசிரியர்களையும் மீண்டும் சந்திப்போமா என்பது கணவாகவே இருந்தது. இன்று அந்த கனவு நனவாகி இருப்பதாகவும் இந்த விழாவில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு ஆசிர்வதித்தது தங்களை மேலும் முன்னேற்றும் என தெரிவித்தனர்.
படித்ததோடு ஆசிரியர்களை மறந்து விடும் மாணவர்கள் மத்தியில் 24 ஆண்டுகளுக்கு பிறகு தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களை தேடி கண்டுபிடித்து அவர்களிடம் வாழ்த்து பெற்ற மாணவ மாணவிகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications