இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் கோவில் விழாக்களில் தலைமையேற்கக்கூடாது - பாஜக எம்.எல்.ஏ காந்தி பரபர!
நாகர்கோவில; இந்து மத நம்பிக்கை இல்லாதவர்களை கோவில் விழாக்களில் தலைமையேற்க அனுமதிக்க மாட்டோம் என நாகர்கோவில் தொகுதி பாஜக எம்.எல்.ஏ தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மருதங்கோடு ஆலம்பாடி ஸ்ரீகிருஷ்ண வித்யாலய பள்ளியில் கம்பியூட்டர் ஆய்வகம் திறப்பு மற்றும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் மரம் நடுதல் ஆகிய நிகழ்வுகளை துவங்கி வைக்க நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி வருகை தந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம பேசுகையில் இந்து ஆலயங்கள், இந்து கடவுள்களை வணங்காதவர்கள், கலாச்சாரம் பாரம்பரியம் மற்றும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை வைத்து திமுக அரசு அறநிலையத் துறை மூலம் கோயில் நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கும் செயல்களை செய்து வருகிறது.

வருத்தம்
இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என பாஜக கேட்டுக் கொள்கிறது. இந்து ஆலய நிகழ்ச்சிகளில் இந்து நம்பிக்கை, இறை நம்பிக்கை உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டும். கோயில் நிகழ்ச்சிகளைத் தொடங்க வேண்டும் என்றால் இந்து மத நம்பிக்கை உள்ளவர்களை அனுப்பினால் பாஜக வரவேற்கும்.

அறநிலையத் துறை
அதற்கு அறநிலையத் துறை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் அதிக இந்து அமைச்சர்கள் உள்ளனர் என எம்.ஆர். காந்தி தெரிவித்துள்ளார். பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற விமர்சனம் முன் வைக்கப்படும் நிலையில் எம்.ஆர். காந்தி எம்எல்ஏ பேசியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறை நம்பிக்கை
இதே போல் நேற்றைய தினம் வேளிமலை முருகன் கோயில் தேரோட்ட விழா குறித்து காந்தி பேசுகையில் இந்து மதத்தை நம்பாதவர்கள், இந்து ஆலயங்களுக்கு செல்லாதவர்கள், இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் இந்து கோயில் தேரை வடம் பிடித்து இழுக்கவும் தேரோட்ட நிகழ்ச்சிகளுக்கு தலைமை ஏற்கவும் கூடாது.

கோயில்களில் திருப்பணி
இதை ஏற்க முடியாது. இந்து கோயில்களில் திருப்பணிகளுக்கும் கும்பாபிஷேகத்திற்கும் அன்னதானங்களுக்கும் இந்து அறநிலையத் துறையில் இருந்து வரும் நிதியே ஒதுக்கப்படுகிறது. தமிழக அரசு தனியே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications