கன்னியாகுமரி இளைஞர்களே! வேலை தேடுகிறீர்களா? இதோ அரிய வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் வரும் 26ம் தேதி மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. எனவே இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டில் கல்வியறிவில் முன்னணியில் உள்ள மாவட்டமாகும். கேரளாவை ஒட்டி இருப்பதால், மொழி, உணவு, உடை என கலாச்சார ரீதியில் அம்மாநிலத்தை ஓரளவு பிரதிபலிக்கும் மாவட்டமாகவும் கன்னியாகுமரி இருக்கிறது.

Kanyakumari Tamil Nadu job jobs

ஆனால் இம்மாவட்டங்களில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு தொழிற்சாலைகள் கிடையாது. இருப்பினும், சேவை மற்றும் சுற்றுலா துறைகளில் இம்மாவட்டம் சிறந்து விளங்குகிறது. இதன் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகளும், ஊதியமும் சொற்பமாக இருப்பதால் இளைஞர்கள் வெளி மாவட்டங்களில், வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்று வருகின்றனர். இப்படி இருக்கையில் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.

இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 26.07.2025 சனிக்கிழமை அன்று மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடத்தப்படவுள்ளது.

இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, செவிலியர் படிப்பு போன்ற கல்வித் தகுதி உடைய வேலை நாடுநர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது பணிக்காலியிடங்கள் தொடர்பான விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுகொள்ளப்படுகிறீர்கள். தகுதியான நிறுவனங்களுக்கு மட்டுமே CONFIRMATION MAIL அனுப்பப்படும். Confirmation Mail பெறப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளமுடியும் எனவும், இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று பதிவு செய்யாமல் வரும் வேலையளிக்கும் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாது என்ற விவரமும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய சமூகவலைதளமான TELEGRAM CHANNEL ல் EMPLOYMENT OFFICE NAGERCOIL என்ற குழுவில் தங்களை இணைத்து கொள்ளுமாறும் மற்றும் "தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் TamilNadu Private Job Portal" (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, இச்சேவையை பொதுமக்களும், நிறுவனங்களும் பயன்படுத்தி இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., தெரிவித்துக் கொள்கிறார்கள்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+