சாவர்க்கருக்கும்.. சுசீந்தரம் கோயிலுக்கும் என்ன தொடர்பு? வாழ்க கோஷம் போட்ட RSS.. மனோ தங்கராஜ் கேள்வி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தின் மிகவும் பிரசித்திப்பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தேரோட்டத்தின்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சாவர்க்கர் வாழ்க என முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், சுசீந்தரம் கோயிலுக்கும்.. காந்தியை கொன்ற சாவர்க்கருக்கும் என்ன தொடர்பு? என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மேலும் அவர் பேசியதாவது, "கன்னியாமரி மாவட்டத்தில் மிக பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல், வரலாற்று பின்னணி கொண்டது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் குடி கொண்டிருக்கக்கூடிய கோயில் இது.

இக்கோயிலின் மார்கழி தேர் திருவிழா நிகழ்ச்சியில், பாஜகவும் ஒரு சில மதவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள், தேர் பிடிக்கின்ற நேரத்தில்.. காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சார்வர்க்கர் வாழ்க என்று முழக்கமிடுகின்றனர். இது உண்மையிலேயே அங்கு வந்திருக்கக்கூடிய பக்தர்களை மிகவும் புண்படுத்தக்கூடிய ஒரு செயல்.
அது மட்டுமல்ல, காந்தி இந்த தேசத்தின் ஒற்றுமைக்காகவும், மத ஒற்றுமைக்காகவும், சாதி ஏற்றத்தாழ்வு ஒழிய வேண்டும் என்றும் குரல் கொடுத்ததற்காக படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சார்வர்க்கர். அவருக்கும் தானமலைசாமி கோவிலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?
பாஜாகாவும், மதவாத அமைப்புகளும் திருக்கோயில்களில் நுழைந்து.. அங்கு இருக்கக்கூடிய மக்களிடம் தவறான கருத்துக்களை கொண்டு செல்லுகின்ற முயற்சியை இந்த சம்பவம் மிக தெளிவாக காட்டுகிறது. இது வன்மையாக கண்டிக்க கூடியது. மிகுந்த வேதனை அளிக்கக்கூடிய ஒன்று.
வேற்றுமையில் ஒற்றுமைதான் நம்முடைய பெருமை. இதை உலகே வியந்த பார்க்கிறது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில், காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை சொல்லி வாழ்க என்று கோயிலுக்குள் பாஜகவும், மதவாத கும்பல்களும் முழுக்கமிடுகிறார்கள். அப்படியெனில் மதத்தை வைத்து அரசியல் செய்வதை தவிர, இவர்களுக்கு வேற என்ன நோக்கம் இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு












Click it and Unblock the Notifications