இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல்காந்திதான்- ஸ்டாலின் தடாலடி
நாகர்கோவில்: இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல்தான் என திமுக தலைவர் ஸ்டாலின் தடாலடியாக அறிவித்தார்.
நாகர்கோவிலில் திமுக- காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள ராகுல்காந்தி தமிழகம் வந்துள்ளார். இந்த விழாவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பேசுகையில் இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான். இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல்தான். கருணாநிதியின் மகனாக ராகுலை வரவேற்கிறேன்.

வளர்ச்சி இல்லை
ராகுலை பிரதமர் வேட்பாளராக துணிச்சலோடு நான் அறிவித்தேன். ஒளிமயமான இந்தியாவை தர வேண்டும். நாட்டிலும் அனைத்து துறைகளிலும் தளர்ச்சி, தளர்ச்சி, தளர்ச்சி வளர்ச்சி இல்லை.

தொப்பி
கண்கட்டி வித்தைக்காரர் போல் மோடி செயல்படுகிறார். கருப்பு பணத்தை கேட்டால் நல்ல பணத்தை ஒழித்துக் கட்டினார். விருப்பமான உடைகளையும் தொப்பிகளையும் அணிந்து கொண்டு நாடு நாடாக செல்கிறார்.

கருப்பு பணம்
பிரதமர் மோடி ஒளிர்ந்து கொண்டு இருக்கிறாரே தவிர இந்தியா ஒளிரவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக அடிக்கல் நாட்டு விழாவை மட்டுமே நடத்தி வருகிறார். பாஜக ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் கொடுப்பேன் என்றார் மோடி.

40 தொகுதிகளை வென்ற கூட்டணி
ஆனால் ரூ 15 லட்சம் அல்ல, அட 15,000 ரூபாயும் அல்ல. வெறும் 15 ரூபாய் கூட இதுவரை யார் வங்கிக் கணக்கிலும் செலுத்தப்படவில்லை. 2004-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் 40 தொகுதிகளை வென்ற கூட்டணிதான் இந்த மேடையில் உள்ளது.

இரும்பு மனிதரல்ல
ஏழைகள் சிரித்திட இறைவனை காண்போம் என அண்ணா கூறினார். அதற்கேற்ப உங்கள் (ராகுல்) ஆட்சி மூலம் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் கிடைத்திட வேண்டும். உங்களை ஆதரிக்க காரணம் நீங்கள் மோடி அல்ல. ராகுல் என்பதால்தான். பிரதமர் நரேந்திர மோடி இரும்பு மனிதரல்ல. அடிக்கல் நாட்டு மனிதர் பிரதமர் மோடி.

5-ஆவது ஆண்டில்
30 நாட்களில் 155 அடிக்கல் நாட்டு விழாக்களை நடத்தியுள்ளார். ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில் அடிக்கல் நாட்டு விழாக்களையும் 5-ஆவது ஆண்டில் திறப்பு விழாக்களையும் நடத்த வேண்டும். ஆனால் மோடியோ வெறும் அடிக்கல் நாட்டுவதையே செய்து வருகிறார்.

வேறு தலைவர்கள் பெயர்
தங்கள் கட்சியில் உள்ள யார் பெயரையும் கூறி வாக்குக் கேட்கும் நிலையில் பாஜக இல்லை. வேறு தலைவர்களின் பெயரை கூறியே வாக்கு சேகரிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது என்றார் அவர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications