Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

60 வயசு முருகேசனுக்கு 13 வயசு பிஞ்சு கேக்குதா.. பெற்ற தாயே இப்படி பண்ணலாமா.. பதறி துடிக்கும் மக்கள்

நாகர்கோவில் முன்னாள் எம்எல்ஏ முருகேசன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: 60 வயசு முருகேசனுக்கு 13 வயசு பிஞ்சு கேட்குதா? பெற்ற தாயே குழந்தையை பணத்துக்காக, மாஜி எம்எல்ஏவிடம் அழைத்து சென்று பாழுங் கிணற்றில் தள்ளிய சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் தமிழகத்தை விட்டு விலகவில்லை.

நாகர்கோவில் அடுத்த கோட்டாரை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய காதலனுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டார்.. அதனால் மகளை காணோம் என்று பெற்றோர் கோட்டார் போலீசில் புகார் தந்தனர். இந்த புகாரின் அடிப்படையில், போலீசாரும் அவர்கள் 2 பேரையும் தேடி கண்டுபிடித்து விட்டனர்.

அப்போது, அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன்தான் தன்னை பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் தந்திருந்தார்.. இதையடுத்து எஸ்கேப் ஆகி, ஒரு தோட்டத்துக்குள் ஒளிந்து கொண்டிருந்த முருகேசனை 5 தனிப்படைகள் வைத்து தேடி, இறுதியில் கைது செய்தனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த விவகாரத்தில் 2 விஷயங்கள் மிகுந்த அதிர்ச்சியை தந்து வருகிறது.. காணாமல் போன சிறுமியை போலீசார் கண்டுபிடித்ததுமே, புகார் தந்திருந்த பெற்றோரிடம் ஒப்படைக்கவில்லை.. மாறாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்று, அங்கு வைத்துதான் விசாரித்திருக்கிறார்கள். பெற்றோருடன் தன்னை அனுப்ப வேண்டாம் என்று சிறுமி கதறி அழுதாராம்.

 பெற்ற தாய்

பெற்ற தாய்

2 வருஷத்துக்கு முன்பு அதாவது 2017-ல், பெற்ற மகளை கொண்டு முருகேசனிடம் கூட்டிக் கொண்டு போனாராம் பெற்ற தாய்.. பணத்துக்காக இந்த ஈன காரியத்தை அவர் செய்திருக்கிறார்.. இந்த முருகேசனுக்கு 60 வயசாகிறது.. 2 வருடத்துக்கு முன்பு என்றால் சிறுமிக்கு 12 அல்லது 13 வயசுதான் இருந்திருக்கும்.. பெற்ற தாய்க்கும், இந்த 60 வயசு கிழவனுக்கும் மனசாட்சி வேணாமா?

கண்ணீர்

கண்ணீர்

முருகேசன் தான் மட்டும் சிறுமியை சீரழிக்காமல், தன்னுடைய நண்பர்களுக்கும் விருந்தாக்கினாராம்.. இதை சொல்லி அழுத சிறுமி, "என் அம்மாகிட்ட என்னை அனுப்பாதீங்க" என்ற கண்ணீர் மல்க போலீசாரிடம் கதறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ந்த போலீசார், சிறுமியின் அம்மா, பால், அசோக்குமார், கார்த்திக் ஆகிய 4 பேர் கைது அப்போதே கைது செய்தனர்.

 கும்பல்

கும்பல்

நாஞ்சில் முருகேசனுக்கு அந்த சிறுமியின் அம்மாவுடனே தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.. தான் நாசமா போனதுடன், இல்லாமல் பெற்ற மகளையும் பணத்துக்காக கொண்டு வந்து 60 வயது நபரிடம் குழந்தையை விட்டு சென்றிருக்கிறார்.. இந்த பாலியல் கும்பலிடம் சிறுமி தவித்து சிக்கியிருக்கிறாள்.. அந்த பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவித்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.

 வாக்குமூலம்

வாக்குமூலம்

சிறுமியின் முழு வாக்குமூல அறிக்கையை குழந்தைகள் நலக்குழுவினர் கலெக்டருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. கலெக்டரும் எஸ்பியும் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தி, சென்னை டிஜிபி அலுவலகம், மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்... இதன்பிறகுதான் முருகேசனை கட்சியில் இருந்தே தூக்கியது தலைமை.. குழந்தைகள் வன்கொடுமையில் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

தோட்டம்

தோட்டம்

பிறகு, 5 தனிப்படைகள் அமைத்து, தோட்டத்தில் பதுங்கி கொண்டிருந்த முருகேசனை நேற்று கைது கைது செய்தனர்.. ஆனால், அவருக்கு திடீரென நெஞ்சு வலி வந்துவிட்டதாம்.. அதனால் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் செக்கப்புக்காக அழைத்து சென்றனர்.. அங்கு பிரஷர் அதிகமாக இருப்பதாக சொல்லி ஆஸ்பத்திரியிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் முருகேசன்.. போலீஸ் பாதுகாப்பு அங்கு போடப்பட்டுள்ளது.

 அதிர்ச்சி

அதிர்ச்சி

ஒரு கட்சியில் பொறுப்பில் இருக்கிறோம் என்றுகூட நினைக்காமல், 60 வயசாகிறதே என்று உருத்தாமல், நண்பர்களுடன் சேர்ந்து ஒரு குழந்தையை நாசம் செய்த முருகேசனையும் சரி, பணத்துக்காக பிஞ்சுவை படுகுழியில் தள்ள நினைத்த அந்த தாயும் சரி.. 2 பேருமே மன்னிக்க முடியாதவர்கள்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+