காதல் மன்னன் மட்டுமில்லை.. கந்து வட்டியிலும் இவருதான் கிங்காம்.. நாகர்கோவில் காசிக்கு 3 வருஷம் சிறை!
நாகர்கோவில்: இளம்பெண்களை காதல் வலையில் விழ வைத்து பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆயுள் சிறை தண்டனை கைதியாக உள்ள நாகர்கோவில் காசிக்கு கந்து வட்டி வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி (20). கடந்த 2020ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை, பண மோசடி புகார் அளித்ததன் காரணமாக காசியை போலீஸார் கைது செய்தனர்.

அவருடைய செல்போனை ஆய்வு செய்ததில் அவர் இளம்பெண்களை காதல் வலையில் விழ வைத்து அவர்களுடன் நெருக்கமாக பழகி, அதை வீடியோவாக எடுத்துக் கொண்டு அந்த பெண்களை மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.
இதனால் காசி மீது கோட்டார், வடச்சேரி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பாலியல் வழக்கு, கந்து வட்டி வழக்கு என மொத்தம் 7 வழக்குகள் பதிவானது.
பின்னர் இந்த வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. காசியின் செல்போனை பார்த்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஏராளமான பெண்களை பாலியல் ரீதியில் பயன்படுத்திய வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. 400 ஆபாச வீடியோக்கள், 1900 நிர்வாணப் படங்கள் இருந்தது.
இந்த நிலையில் காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டர். இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காசிக்கு ஆயுள் தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் காசி மேல்முறையீடு செய்தார்.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், "மனுதாரர் நூற்றுக்கணக்கான இளம்பெண்கள், பள்ளி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்து புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. எனவே ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவித்தார். அரசுத் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு எதிரான குற்றம் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது. குற்றத்தின் தன்மையை கருதி மனுதாரரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
மீதமுள்ள 6 வழக்குகளில் இரு வழக்குகளில் சிபசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த டிராவிட் என்பவர் வடச்சேரி காவல் நிலையத்தில் கந்து வட்டி வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணையில் காசி, அவரது தந்தை தங்கபாண்டியன், இடைத்தரகர் நாராயணன் ஆகிய மூவரும் ரூ. 2 லட்சம் கடனுக்கு டிராவிடிடம் இருந்து கந்து வட்டி வசூலித்தது தெரியவந்தது.
மேலும் மோட்டார் சைக்கிளை போலியான ஆவணங்களை தயாரித்து காசியின் பெயருக்கு மாற்றி உள்ளதும் தெரியவந்தது. இந்த கந்து வட்டி வழக்கு விசாரணை நாகர்கோவில் மூன்றாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அதில் காசி, புரோக்கர் நாராயணனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் தங்கபாண்டியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications