அதிர வைக்கும் ஆபாச வீடியோக்கள்.. சரமாரி பெண் தொடர்பு.. சிபிசிஐடி வசம் நாகர்கோவில் காசி வழக்கு!
நாகர்கோவில் காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
நாகர்கோவில்: யார் அந்த நடிகை மகள், வீடியோவில் காசியுடன் நெருக்கமாக இருந்த விஐபி மனைவி யார், நாகர்கோயில் காசிக்கு உதவிய புள்ளிகள் யார் யார் போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.. காரணம், காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் காசியின் வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ளது.
Recommended Video
நாகர்கோவில் காசி சிறுமிகள் முதல் குடும்ப பெண்கள் வரை எல்லாரையுமே சீரழித்துள்ளார்.. இது சம்பந்தமான நிர்வாண போட்டோக்கள், ஆபாச வீடியோக்கள் காசியின் லேப்டாப்பில் சிக்கியது.. அதை அடிப்படையாக வைத்துதான் விசாரணை நடந்து வருகிறது.

ஆபாச வீடியோக்களை ஆய்வு செய்தபோதே விஐபிகள், அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. இத்தனை பெண்களை நாசம் செய்து, கோடிக்கணக்கில் பணத்தை மிரட்டி பறித்துள்ளார் என்றால் நிச்சயம் பின்புலம் இல்லாமல் செய்திருக்க முடியாது என்று முதலில் இருந்தே நம்பப்பட்டு வந்தது.
பாதிக்கப்பட்டவர்களும், குடும்ப மானம் வெளியாகி கேவலப்பட்டுவிடுவோம் என்பதால் இதுவரை புகார் தராமல் உள்ளனர். ஏற்கனவே ஒருமுறை போலீஸ் காவலில் காசியிடம் விசாரணை நடந்தது.. எந்த தகவலும் பெரிதாக வரவில்லை.. ஆபாச வீடியோவை அப்லோடு செய்யும் ஜினோ என்ற நண்பனை பற்றி மட்டும்தான் விஷயம் வந்தது.
இந்த சமயத்தில்தான் சிறுமி ஒருவரும் காசி மீது புகார் தந்தார்.. இந்த சிறுமியை இரண்டரை வருஷமாகவே காசி காதலிப்பது போல நடித்து சீரழித்து வந்துள்ளார்.. அந்த சிறுமியிடம் பணம் பறிக்க முயல்வதற்குள்தான் போலீசில் சிக்கி கொண்டார். அதனால் இவர் யார் யாரை ஏமாற்றி பணம் பறித்தால் என்பதை விசாரிக்க திரும்பவும் 6 நாள் விசாரணை நடந்து வருகிறது.
இதில் பெரிய பெரிய புள்ளிகள், அரசியல் பிரமுகர்கள், விஐபிக்கள் என பலரும் சம்பந்தப்பட்டிருப்பதால், அனைவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டியிருக்கும் என போலீஸ் தயக்கம் காட்டுவதாக ஒருசிலர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.. அதனால் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி, சிபிஐக்கு மாற்றினால் பல தகவல்கள் கிடைக்கலாம் என சமூக ஆர்வலர்களும் கூறியபடியே இருந்தனர்.
முதலில் காசி ஏமாற்றியது வெறும் தமிழகத்தில் மட்டும்தான் என்று யூகிக்கப்பட்டது.. பிறகுதான் இவர் பெங்களூரு, பாண்டிச்சேரி என பிற மாநிலங்களிலும் வேலையை காட்டியதால், சிபிஐ விசாரணை தேவை என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
இதை அதிகமாக வலியுறுத்தி வருவது மாதர் சங்கத்தினர்தான்... "காசியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றால், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியே ஆகவேண்டும்" என்கிறார்கள். இந்நிலையில் தற்போது காசி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதனால் வழக்கு சூடு பிடித்துள்ளது.. இனி காசி அவ்வளவு எளிதாக போலீஸ் பிடியில் இருந்து தப்பிவிட முடியாது என்றும் தெரிகிறது.. அதேசமயம் அந்த நடிகை மகள் யார், விஐபி மனைவி யார், காசிக்கு உதவும் அரசியல் புள்ளிகள் யார், யார் என்ற அனைத்து விவரங்களும் வெளிவந்துவிடும் என தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications