மனைவி போயிட்டாளே.. கதறி துடித்த கணவன்.. ப்பா என்னா ஆக்டிங்! பரோட்டா மாஸ்டரை "பார்சல்" பண்ணிய போலீஸ்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் மனைவியை கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய கணவரை போலீசாரை கைது செய்தனர்.
நாகர்கோவிலில் பரோட்டோ கடை நடத்தி வந்து இருக்கிறார் முகமது உசைன். இவருக்கும் நாகர்கோவிலை சேர்ந்த ரெஜினா பானு என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது,.
திருமணம் நடந்த தொடக்கத்தில் இவர்கள் சந்தோசமாக வாழ்ந்து இருக்கின்றனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர்களிடையே சண்டை அதிகம் ஆகி உள்ளது.

சண்டை
முக்கியமாக இவர்களுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. பரோட்டா மாஸ்டராக இருக்கும் உசைன் கடையை மூடிவிட்டு இரவில் வந்து ரெஜினாவை தினமும் அடிப்பதை வழக்கமாக வைத்து இருந்துள்ளார். சமயங்களில் குடித்துவிட்டு அடிப்பதையும் வழக்கமாக வைத்து இருந்தார். ரெஜினா இது தொடர்பாக தனது பெற்றோரிடம் அவ்வப்போது புகார் அளித்துள்ளார்.

பெற்றோர்
ஆனால் பெற்றோரோ, அதெல்லாம் சரியாகிவிடும். கவலைப்பட வேண்டாம். அவர் நல்ல மனுஷன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்று அறிவுரை வழங்கி உள்ளனர். இந்த விவகாரத்தில் ரெஜினாவிற்கு ஆதரவாக யாரும் இல்லை. இந்த நிலையில்தான் நேற்று காலை திடீரென உசைன் ஆம்புலன்சுக்கு கால் செய்து உள்ளார். என்னுடைய மனைவி தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை என்று கால் செய்து கூறி உள்ளார்.

ஆம்புலன்ஸ்
இதையடுத்து உடனடியாக ரெஜினாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், ரெஜினா தூங்கும் முன் நெஞ்சு வலிக்கிறது என்று கூறினார். சாப்பாடு செரிக்காமல் அப்படி இருக்கலாம் என்பதால் விட்டுவிட்டேன். ஆனால் காலையில் உயிருடன் இல்லை. அதனால் ஆம்புலன்சுக்கு போன் செய்தேன் என்று உசைன் கூறி உள்ளார். அதோடு என் மனைவி போயிட்டாளே என்று கூறி கண்ணீர்விட்டு அழுது இருக்கிறார்.

பிரேத பரிசோதனை
ஆனால் மருத்துவர்கள் ரிப்போர்ட்படி அவரின் உடலில் எந்த விதமான குறைபாடும் இல்லை. எந்த நோய் பாதிப்பும் இல்லை. அதோடு கழுத்து இறுக்கமாக நெரிக்கப்பட்டு அடையாளங்கள் இருந்துள்ளன,. மூச்சு விட முடியாமல் அந்த பெண் இறந்ததாக அறிக்கை கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒருவழியாக மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டார் உசைன். மனைவி நடத்தை மீது சந்தேகம் இருந்ததால் அவரை கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார் உசைன்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications