காதல் வலையில் சிக்கிய சிறுமிகளை 4 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை.. காமுகனை தேடும் போலீஸ்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து தனது நண்பர்களுக்கும் இளைஞர் ஒருவர் விருந்தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (24). இவர் கட்டடத் தொழிலாளி. பள்ளி மாணவிகளிடம் நட்பாக பேசி பழகி காதலிப்பதாக கூறுவது இவரது வழக்கம். இவருடைய பேச்சில் மயங்கும் சிறுமிகளை மூளைச் சலவை செய்வதையும் விக்னேஷ் வாடிக்கையாக வைத்திருந்தாராம்.

பின்னர் அவர்களை தனிமையான இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்துவிட்டு அவர்களை கை கழுவி விடுவதையே வாடிக்கையாக கொண்டிருந்தாராம்.
அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஒரு மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை பார்க்க வேண்டும் என நண்பரின் வீட்டிற்கு அழைத்து அங்கு வைத்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை பெற்றோரிடம் சொல்லிவிடுவதாக மிரட்டி மிரட்டியே தனது இரு நண்பர்களுக்கும் அந்த சிறுமியை விருந்தாக்கியுள்ளார்.
அப்போது அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விக்னேஷ் உள்ளிட்ட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் விக்னேஷ் மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் அடி தடி, கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் கருங்கல் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கும் என மொத்தம் 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் விக்னேஷ் மீண்டும் தனது வேலையை காட்டியுள்ளார். ஆசாரிபள்ளத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும் அந்த சிறுமியை தனியே ஒரு இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரமும் செய்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து விக்னேஷ் குறித்து அறிந்து கொண்ட அந்த மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார்.

இதையடுத்து மாணவியின் பெற்றோரும் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விக்னேஷ் மீது போலீஸார் போக்சோ வழக்கை பதிவு செய்துள்ளனர். தற்போது 2 ஆண்டுகள் கழித்து அவர் மீது இரண்டாவது முறையாக போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது. ஆனால் இதுவரை போலீஸாரிடம் சிக்காமல் விக்னேஷ் தலைமறைவாகவே வாழ்ந்து வருகிறார்.
விக்னேஷை போலீஸார் தேடி வருகிறார்கள். சிறுமிகளை குறி வைத்து தன் வலையில் வீழ்த்தி காதலிப்பது போல் நடித்து கடத்தி செல்லும் இந்த விக்னேஷ் இரண்டு முதல் 4 நாட்கள் வரை தன் தேவைக்கேற்ப அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு வீட்டுக்கு அனுப்பிவிடுவாராம். காணாமல் போன குழந்தைகள் கிடைத்தால் போதும் என நினைத்து விக்னேஷ் மீது சிறுமிகளின் பெற்றோர் புகார் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications