"தமிழகத்தில் ஆட்சி அமைப்பதுதான் எங்கள் கட்சியின் நோக்கம்.." அடித்து சொல்லும் சரத்குமார்!
நாகர்கோவில்:தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம் என்றும், எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி மக்களுக்கு சேவை செய்து, மக்கள் திட்டங்களை வகுத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்து திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதுதான் ஒரு இயக்கத்தின் கொள்கையாக இருக்கும் என்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது, எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் மக்கள் பணியாற்றி மக்கள் திட்டங்களை வகுத்து, ஆட்சி பீடத்தில் அமர்ந்து அந்த திட்டத்தை செயல்படுத்துவதுவதான் எந்த ஒரு இயக்கத்திற்கும் நோக்கமாக இருக்கும் என்று சரத்குமார் கூறினார். இது தொடர்பாக சரத்குமார் கூறியதாவது:-

இது தான் எங்கள் இலக்கு
தமிழகத்தில் ஆட்சி அமைப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம். எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி மக்களுக்கு சேவை செய்து, மக்கள் திட்டங்களை வகுத்து ஆட்சி பீடத்தில் அமர்ந்து திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுப்பதுதான் ஒரு இயக்கத்தின் கொள்கையாக இருக்கும். இலக்காகவும் இருக்கும். அந்த இலக்கிற்காக நாங்கள் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.

மக்களுக்கு சேவை செய்தால்
இதற்காக நிர்வாகத்தை சீர்படுத்திக் கொண்டே இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வதுதற்கு தான் இந்த இயக்கம். இந்த கட்சி தொடங்கியதில் இருந்து மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. கட்சி நிர்வாகத்தை பலப்படுத்தி வருகிறோம். மக்களுக்கு சேவை செய்தால் நிச்சயம் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்தியாவிலேயே சிறப்பான காவல்துறை
தமிழகத்தில் இளைஞர்களிடையே போதை போருள் பழக்கம் அதிகரித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இதை தடுக்க அரசு தனிப்படைகள் அமைத்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மாணவர்களை மூளை சலவை செய்து அவர்களை போதை பழகக்த்திற்கு ஆளாக்கும் செயல் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. இவற்றை போலீசார் கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு போலீஸ் இந்தியாவிலேயே சிறப்பான காவல்துறை என பெயர் பெற்றது.

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன்..
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் காவல்துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது. பெரிய அளவில் மத கலவரங்கள், சமூக பிரச்சினைகளால் பாதிப்பு ஏற்பட்டால்தான் அது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக பார்க்க முடியும். தமிழகத்தை பொறுத்தவரை அப்படியான ஒரு நிலை இல்லை. வரவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என கேட்பதை விட எத்தனை சீட்டுகள் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வியை முக்கியமாக கருதி வருகிறோம்" என்றார்.
-
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
அண்ணாமலை போடுவது மாரீச மான் வேடம்.. ஆர்எஸ்எஸ்-ன் 2,501 அமைப்பு அது.. சண்முகம் ஒரே போடு! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி!












Click it and Unblock the Notifications