பள்ளிக்கூடத்துக்கு சீர்.. பட்டையை கிளப்பிய பெற்றோர்.. கன்னியாகுமரியில் கலக்கல்!
Recommended Video
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடி தூய அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெற்றோர் கலந்துகொண்டு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி கற்கும் உபகரணங்களை பள்ளிக்கு வழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம் கீழ மணக்குடியில் நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இதனிடையே மாணவ மாணவிகளின் கல்விக்கு பயன்படும் விதமாக பள்ளிக்கு தேவையான நோட் புக், பென்சில், மின்விசிறிகள், குடிநீர் பாட்டில்கள், இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள், திண்பண்டங்கள் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்கள் மற்றும் பங்குமக்கள் இணைந்து பள்ளிக்கு கல்வி சீர் வரிசையாக வழங்கினார்கள்.
முன்னதாக அனைத்து சீர் வரிசை பொருட்களை ஆலயத்தின் முன்பு இருந்து நூற்றுக்கும் அதிகமான பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மேள தாளம் முழங்க ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வந்து அதனை பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர்.
தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி அனைத்து வசதிகளுடன் அமைந்து அதனுடன் பள்ளி வளம் பெற்றால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் வளமானதாக அமையும் என்பதால் தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சீர் வரிசை பொருட்களை வழங்குவதாக நிகழ்ச்சியின்போது தெரிவிக்கபட்டது. இந்நிகழ்ச்சியின் போது மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications