மேலும் 4 பெண்கள்.. அடுத்தடுத்து வரும் ஆபாச பாதிரியாரின் லீலைகள்.. அதிரடியாக களம் இறங்கிய சைபர் கிரைம்
நாகர்கோவில் : ஆபாச படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மேலும் 4 பெண்கள் காவல்துறையில் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து பாதிரியாரை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதாகும் பெனடிக்ட் ஆன்றோ பாதிரியார் ஆவார். இவர் இளம் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டனர். இந்த படங்களை கண்டு ஆவேசமான பலர், பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டதாக பேச்சிப்பாறையைச் சேர்ந்த ஒரு நர்சிங் மாணவி, போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த முடிவு செய்தனர்.

கைதான பாதிரியார்
ஆனால் அவர் தலைமறைவானார். எனினும் தொடர்ந்து தீவிரமாக தேடிய போலீசார், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்து நீதிபதி உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பாதுகாப்பு கருதி அவர் பாளையங்கோட்டை சிறைக்கு தற்போது மாற்றப்பட்டிருக்கிறார்.

ஒரு நாள் அனுமதி
இதற்கிடையே மேலும் 4 பெண்கள் புகார் அளித்ததால், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை ஒரு நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கொடுத்தது.

ஆபாச உரையாடல்
அதன்படி பாளையங்கோட்டை சிறையில் இருந்த பாதிரியாரை போலீசார் நேற்று ஒரு நாள் மட்டும் காவலில் அழைத்து வந்து நேற்று விசாரித்தனர். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்தினார்கள். வீடியோவில் இருக்கும் பெண்கள் தொடர்பாகவும் அவரிடம் கேட்டதுடன், ஆபாச உரையாடல் குறித்தும் விசாரணை நடத்தினார்கள்.

திருமணம்
ஆனால் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ ஏற்கனவே கூறிய தகவல்களை மட்டுமே போலீசாரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆபாச புகைப்படத்தில் இருந்த பெண்ணும், அவரும் காதலித்து வந்தார்கள். ஆனால் பாதிரியார் ஆகிவிட்டதால் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடியாமல் போயிருக்கிறது. அனதால் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது என கூறியுள்ளார். இதனிடையே நர்சிங் மாணவியை தொந்தரவு செய்தது தொடர்பாக போலீசார் கேட்டுள்ளனர். அதற்கும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ போலீசாரிடம் பதில் அளித்துள்ளார். அந்த தகவல்கள் வெளியாகவில்லை.

போலீசார் தீவிரம்
பாதிரியாரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கப்பட்ட ஒருநாள் அவகாசம் முடிந்ததைத் தொடர்ந்து நேற்று மாலையில் அவரை மீண்டும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதனிடையே பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தொடர்பான ஆபாச வீடியோக்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications