திருமண மண்டபத்தில் புரோக்கர் செய்த செயல்! போலீசுக்கு கிடைத்த சீக்ரெட் தகவல்.. ஆடிப்போன நாகர்கோவில்
குமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், திருமண மண்டபத்தில் விபச்சாரம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட 2 இளம்பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்திய பெண் புரோக்கர், திருமண மண்டப உரிமையாளர் மற்றும் தனியார் நிறுவன ஊழியர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தின் சில இடங்களில், முறையான அனுமதி இல்லாமல், லைசென்ஸ்களை புதுப்பிக்காமல், ஸ்பா என்ற பெயரில், மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகின்றன.. இங்கெல்லாம் விபச்சாரங்கள் நடப்பதும் அதிகரித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. இதனால், புகார்கள் வரும் இடங்களில் அவ்வப்போது திடீர் ரெய்டு செல்லும் போலீசார், குற்றச்சாட்டு உண்மையானால் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அப்பாவி இளம்பெண்களை ஏமாற்றி இதுபோன்ற செயல்களில் புரோக்கர்கள் சிலர் ஈடுபடுவதால் இத்தகைய நபர்கள் மீது பாரபட்சம் இன்றி கடுமையான நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சென்னை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடத்திய பெண் கைது செய்யப்பட்டு இருந்தார். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணையும் போலீசார் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்து இருந்தனர்.
இந்த நிலையில், நாகர்கோவிலில் திருமண மண்டபத்தில் இத்தகைய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. இதையடுத்து ரெய்டு சென்ற போலீசார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:- நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் கொய்யன் விலை பகுதியில் திருமண மண்டபம் ஒன்று இருக்கிறது. இந்த திருமண மண்டபத்தில் விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு சீக்ரெட்டாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட அந்த இடத்திற்கு சென்ற போலீசார் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு மண்டபத்தில் அதிரடியாக சோதனை செய்தனர். இதில், அங்குள்ள அறை ஒன்றில் 36 வயது மதிப்புள்ள பெண் இருவரும் ஒரு ஆணும் இருந்தனர். காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, மண்டபத்தில் அரைகுறை ஆடையுடன் இருந்த பெண்கள் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களுடன் தங்கியிருந்த நபர் நெல்லை மாவட்டம் கூடங்குளம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் என்பதும் தெரியவந்தது.
நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அவர் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பெண்களுக்கு பண ஆசை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தியது கோணம் பகுதியை சேர்ந்த மேரிகனகா என்ற 50 வயது பெண் மற்றும் திருமண மண்டப உரிமையாளர் அம்புஜம் (60), தனியார் நிறுவன ஊழியர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மண்டப உரிமையாளர் அம்புஜம், மேரி கனகா, தனியார் நிறுவன ஊழியர் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மீட்கப்பட்ட பெண்களை காப்பகத்தில் தங்க வைத்தனர்.
-
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications