ஜெயமோகன் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.... மளிகை கடைகாரர் மனைவி பரபர வாக்குமூலம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: தம்மை எழுத்தாளர் ஜெயமோகன் ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியதாலேயே கணவர் அவரை திருப்பி அடித்தார் என நாகர்கோவில் மளிகைக் கடைக்காரர் மனைவி பரபர வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

நாகர்கோவில் பார்வதிபுரம் மளிகைக் கடை உரிமையாளர் தம்மை தாக்கியதாக அரசு மருத்துவமனையில் படுத்துக் கொண்டு போலீசில் புகார் கொடுத்தார் ஜெயமோகன். இதனடிப்படையில் ஜெயமோகனை தாக்கிய மளிகைக் கடைக்காரர் செல்வம் கைது செய்யப்பட்டார்.

Shopkeeper wife statement on Jeyamohans dosa batter row

தாம் நேர்மையாக நடந்து கொண்டதாகவும் குடிபோதையில் மளிகை கடைக்கார் தாக்கியதாகவும் ஜெயமோகன் விளக்கம் கொடுத்துள்ளார். அவருக்கு எழுத்தாளர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நடந்த சம்பவம் பற்றி மளிகைக் கடைக்காரர் மனைவி போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ஜெயமோகன் தம்மை ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.. மாவு பாக்கெட்டை என் முகத்தில் வீசி எறிந்தார்.

Shopkeeper wife statement on Jeyamohans dosa batter row

அத்துடன் நிற்காமல் கடைக்குள் வந்து என் தலைமுடியை பிடித்து அடிக்க முயற்சித்தார் ஜெயமோகன். இதை பார்த்துக் கொண்டிருந்த கணவர் செல்வம் தடுக்க முயற்சித்து ஜெயமோகனைத் தாக்கினார். இதுதான் நடந்தது.

கடையில் இருக்கும் போது என் கணவர் குடிப்பதும் இல்லை. ஆனால் போலீசார் கைது செய்த போது குடித்திருந்ததால் ஜெயமோகனால் கதை திரிக்கப்பட்டுவிட்டது. ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் நான் தான் முதலில் சிகிச்சை பெற்றேன்.

ஆனால் தம் செல்வாக்கினால் ஜெயமோகன் கொடுத்த வாக்குமூலம் மட்டும் எடுத்து கொள்ளப்பட்டிருக்கிறது என குமுறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+