கல்லூரி மாணவியை "பலாத்காரம்" செய்த சக மாணவன்.. விசாரித்தால் பெரும் அதிர்ச்சி.. குமரியில் பரபரப்பு!
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் சக மாணவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து சக மாணவன் கைது செய்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் மாணவனுக்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

மாணவி
கன்னியாகுமரி மாவட்டம் ராமன்புதூர் பகுதியை சேர்ந்த 17 வயது இளம் பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்துள்ளார். அதே கல்லூரியில் மற்றொரு மாணவனும் பயின்று வந்திருக்கிறார். இவ்வாறு இருக்கையில் இவர்கள் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் மாணவனுக்கு உடன் பழகிய தோழி மீது நீண்ட நாட்களாக தவறான எண்ணம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து மாணவி திடீரென காணாமல் போயுள்ளார்.

துரோகம்
மாணவியின் பெற்றோர் பல இடங்களிலும் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இவ்வாறு இருக்கையில் மாணவி மீண்டும் வீடு திரும்பியுள்ளார். என்ன நடந்தது என பெற்றோர் விசாரித்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது சக மாணவன் அழைத்ததன் பேரில் அவனது நண்பரின் வீட்டிற்கு மாணவி சென்றிருக்கிறார். அப்போது அந்த மாணவன் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

விசாரணை
இதை கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் மனமுடைந்துள்ளனர். பின்னர் நடந்த சம்பவம் குறித்த மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மாணவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தன்னுடன் படிக்கும் சக தோழியையே மாணவன் ஒருவன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் மாணவனுக்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்தும் காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

தீர்வு
இந்தியாவில் பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து மகளிர் அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அடிப்படையில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தாமல் இந்த குற்றங்களை குறைக்க முடியாது என மகளிர் அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல திரைப்படங்கள், விளம்பரங்கள், இலக்கியங்கள் இன்னபிற ஊடகங்கள் வழியாக பெண்களை போகப்பொருளாக சித்தரிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications