வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தின்.. ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நாகை; புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கியது.
Recommended Video
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. பசலிக்கா அந்தஸ்து பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை ஆண்டு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அதன்படி வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 4.30 மணிக்கு கீழ்க்கோயில் முகப்பிலிருந்து கொடி ஊர்வல பேரணி தொடங்கியது.
கொரோனா பரவல் காரணமாக இந்த விழாவில் கலந்துகொள்ளப் பக்தர்களுக்குத் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல அனைத்து வழிபாடுகளும் பூட்டப்பட்ட பேராலயத்துக்குள் நடைபெறும் என்று பேராலய நிர்வாகம் சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, இந்த பெருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். குறிப்பாகச் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறும் தேர்ப்பவனி நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இருப்பினும், கொரோனா பாதிப்பால் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், 19 இடங்களில் போலீசார் இரும்பு தடுப்பு அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications