ஏங்க இப்படி குடிக்கறீங்க.. மனம் நொந்த மனைவி.. 2 குழந்தைகளுக்கு விஷம் தந்து.. உயிரை விட்ட பரிதாபம்!
தற்கொலை செய்த இளம்பெண் பரிதாபமாக பலியானார்
கன்னியாகுமரி: "ஏங்க இப்படி குடிக்கிறீங்க.. வீட்டு செலவுக்கு என்ன செய்றது? எப்படி சாப்பிடறது?" என்று கேட்ட மனைவி குழந்தைகளுக்கு விஷத்தை கொடுத்து, தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தம்பதி பிரவின்ராஜ் - மினி. பிரவீன்ராஜ் ஒரு கூலி தொழிலாளி. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும் 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

மினிக்கு 27 வயதாகிறது.. பிரவின்ராஜ் கொஞ்ச காலமாகவே வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்துள்ளார். தினமும் கிடைக்கும் பணத்தை வைத்து தண்ணி அடித்து வந்துள்ளார். இதனால் குடும்பம் நடத்த முடியாமல், குழந்தைகளுக்கு சாப்பாடு போட முடியாமல் மினி தவித்துள்ளார்.
பிரவின்ராஜிடம் இதை பற்றி பலமுறை கேட்டும், காதில் வாங்கி கொள்ளவில்லை என தெரிகிறது. அதனால் தினந்தோறும் இவர்களுக்குள் சண்டை வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 20-ம் தேதியும் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது.. பிறகு, பிரவீன்ராஜ் வெளியே சென்றுவிடவும், வீட்டில் இருந்த மினி குழந்தைகளுக்கு விஷத்தை தந்து, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
ரொம்ப நேரமாக மினி வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர்.. அபபோதுதான், மினியும், 2 குழந்தைகளும் மயங்கி கீழே விழுந்துகிடப்பதை கண்டு அதிர்ந்து, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் இருந்த மினி இன்று காலை இறந்துவிட்டார். 2 குழந்தைகளும் இப்போதும் தீவிர சிகிச்சையில் உள்ளன.. இதுகுறித்து வடசேரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications