கொடுமை.. கடன் வாங்கியவர் வைத்த தீயில் சிக்கி கடன் கொடுத்த பெண் பரிதாப மரணம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ராமன் புதூரில் கடன் தொகையை கேட்கச் சென்ற இடத்தில் கடனை பெற்ற தங்கம் என்ற பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தபோது கடன் கொடுத்த பெண் தடுக்க முற்பட்டு அவர் தீயில் கருகி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ராமன் புதூரை சேர்ந்தவர் குமார். ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வருகிறார். இவரது மனைவி அம்பிகா. அம்பிகா சுய உதவி குழுவில் பணியாற்றி வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த தங்கம் என்பவருக்கு அம்பிகா 4 லட்ச ரூபாய் கடன் வழங்கியுள்ளார். கடன் தொகையை பெற்றுக் கொண்ட தங்கம் பணத்தை சிறிது நாட்களுக்குள் தருவதாக கூறியுள்ளார் பணம் வாங்குவதற்காக அம்பிகா பலமுறை தங்கத்தின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். வழக்கம் போல் இன்றும் தான் கொடுத்த நான்கு லட்ச ரூபாயை வாங்குவதற்காக தங்கத்தின் வீட்டிற்கு சென்றுள்ளார் அம்பிகா.
அப்போது பணத்தை கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தங்கம் தனது வீட்டிற்குள் சென்று அங்கிருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்டதும் பதறிய அம்பிகா அவரை தடுக்க முயன்றுள்ளார்.

எதிர்பாராத விதமாக மண்ணெண்ணெய் அம்பிகா உடல் மீது பரவியுள்ளது. இதில் தீ மளமளவென அவர் மீது பற்றியுள்ளது. உடலில் தீ பற்றியதும் இருவரும் கூச்சலிட்டபடி வீட்டிற்குள் அங்குமிங்கும் ஓடி உள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் கடன் கேட்க சென்ற அம்பிகா உடல் முழுவதும் தீ பற்றியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தங்கத்தை அப்பகுதியினர் மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். கொடுத்த கடனை வாங்க சென்றவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications