பிணமாக ஆற்றில் மிதந்த ஸ்ரீஜா.. வயிற்றில் 5 மாத சிசு.. பிபின் தந்த ஷாக் வாக்குமூலம்!

ஆற்றிலிருந்து இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பிணமாக ஆற்றில் மிதந்த ஸ்ரீஜா, வயிற்றில் 5 மாத சிசு- வீடியோ

    நாகர்கோவில்: "5 மாசம் கர்ப்பம்.. கல்யாணம் பண்ணிக்க சொல்லி ரொம்ப தொல்லை.. வேற வழியில்லை.. கொலை செய்ய வேண்டியதா போச்சு" என்று நர்சை கொன்ற கொலையாளி வாக்குமூலம் சொல்லி உள்ளார்.

    குமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜா. 23 வயதான இவர், நித்திரவிளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வந்தார். கடந்த 19-ம் தேதி வேலைக்கு ஸ்ரீஜா அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை.

    இதனால் எல்லா இடங்களிலும் அவரை தேடி வந்த நிலையில், குழித்துறை ஆற்றில் பிணமாக கிடந்தார் ஸ்ரீஜா. வேலைக்கு போன பெண் எப்படி ஆற்றில் கிடப்பார், அவரது சாவில் மர்மம் உள்ளது என்று ஸ்ரீஜாவின் சொந்தக்காரர்கள் கூறி சாலை மறியலிலும் ஈடுபட்டார்கள்.

    இதன்பின்னர் போலீசார் இதில் இறங்கினார்கள். ஸ்ரீஜாவின் உடல் போஸ்ட்-மார்டம் செய்யப்பட்டது. அப்போதுதான் அவர் 5 மாத கர்ப்பம் என்று தெரியவந்தது. கல்யாணமாகாமல் ஸ்ரீஜா கர்ப்பமானதால் இதற்கு யார் காரணம் என கண்டறிய ஆரம்பித்தார்கள். அவரது செல்போன் நம்பர்களை வைத்து ஆராயும்போது, எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்த பிபின் என்ற வேன் டிரைவர் பெயர் அடிபட்டது.

    பிபின் வாக்குமூலம்

    பிபின் வாக்குமூலம்

    இவர்தான் ஸ்ரீஜாவை லவ் பண்ணி வந்திருக்கிறார். பிறகு ஸ்ரீஜா மரணத்துக்கு பிறகு ஆள் எஸ்கேப்பாகி இருந்தார். அதனால் பிபினை போலீசார் தேட ஆரம்பித்தார்கள். பிறகு ஒருவழியாக மாட்டிக் கொண்டார் பிபின். அப்போது அவர் போலீசில் சொன்னதாவது:

    கற்பழித்து விட்டேன்

    கற்பழித்து விட்டேன்

    எனக்கு நர்ஸ் ஸ்ரீஜாவை ரொம்ப பிடித்துவிட்டது. பழக்கம் லவ்வாக மாறியது. கல்யாணம் பண்ணிக்கறேன் என்று சொல்லி சொல்லியே நெருங்கினேன். ஆனால் என்னை ஒரு அளவுக்கு மேல் ஸ்ரீஜா நெருங்க விடவில்லை. அதனால், ஒருநாள் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துவிட்டேன். பிறகு ஒருநாள் என்னிடம் வந்து, 5 மாத கர்ப்பம் என்று சொன்னார்.

    கலைக்க முடியல

    கலைக்க முடியல

    கூடவே கல்யாணத்துக்கு தொல்லை பண்ண ஆரம்பிச்சிட்டார். இதுக்கு நான் ஒத்துக்கவே இல்லை. ஆஸ்பத்திரியில போய் கலைக்கலான்னு நெனச்சோம். ஆனால் 5 மாச கருவை கலைக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. தினமும் இதை வச்சி எங்களுக்குள்ள சண்டை வந்துட்டே இருந்தது. என்னை போலீசில் புடிச்சி தரப் போவதாகவும் சொன்னார். அதனால இதுக்கு ஒரு முடிவு கட்டலாம்னு யோசிச்சேன்.

    தாலி வாங்கிட்டு வா

    தாலி வாங்கிட்டு வா

    20 தேதி இரவு ஸ்ரீஜாவை நேரில் பார்த்து கல்யாணம் செய்துக்கலாம் வா என்று நள்ளிரவு தாமிரபரணி ஆற்று பாலத்துக்கு கூட்டிட்டு போனேன். அப்போது தாலி வாங்க ஸ்ரீஜா, காலில் போட்டிருந்த கொலுசு, பிரைஸ்லெட் எல்லாத்தையும் கழட்டி கொடுத்தார்.

    காஸ்ட்லி செல்போன்

    காஸ்ட்லி செல்போன்

    ஆனால் அவரது செல்போன் மட்டும் என் கைக்கு வரவில்லை. அதனால, ஒரு போன் பண்ணிக்கறேன்னு சொல்லி அவரது காஸ்ட்லி செல்போனையும் வாங்கி கொண்டேன். பிறுகு பேசிக் கொண்டே இருந்தபோது, திடீரென ஸ்ரீஜாவை தூக்கி ஆற்றில் போட்டேன். தண்ணியில தத்தளித்தே ஸ்ரீஜா செத்து போய்ட்டார்" இவ்வாறு பிபின் வாக்குமூலத்தில் சொன்னார்.

    பல மாணவிகள்

    பல மாணவிகள்

    இதையடுத்து விசாரணை மேலும் நடந்து வருகிறது. அப்போதுதான், தன்னுடைய வேனில் ஏறி வரும் பல ஸ்கூல், காலேஜ் மாணவிகளை இப்படியே ஆசை வார்த்தை சொல்லி சொல்லி அவர்களையும் பிபின் நாசம் செய்ததும் தெரியவந்துள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+