நாமக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எலுமிச்சம்பழம்" தந்த முத்துலட்சுமி.. அந்தரத்தில் பறந்து.. கி.வீரமணிக்கு அப்பவே சொன்னாரே.. வேற ஷாக்

ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளையடித்தவர்களில் 5 பேர் கைதாகி உள்ளனர்

Google Oneindia Tamil News

நாமக்கல்: ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. இதற்கு இன்னொரு சம்பவம் நாமக்கல்லில் நடந்துள்ளது.

தமிழகமெங்கும் திராவிட சித்தாந்தத்தை விடாமல் பரப்பிக் கொண்டிருப்பவர் திராவிட கழகத்தலைவர் கி. வீரமணி.. ஒவ்வொரு மேடையிலும் பாஜகவை தவறாமல் விமர்சித்து வருபவர்.

சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.. அந்த அறிக்கையில் விழிப்புணர்வுக்காக ஒரு முக்கிய தகவலையும் குறிப்பிட்டிருந்தார்.

 எலுமிச்சம்பழம்

எலுமிச்சம்பழம்

"புதுக்கோட்டையில் முத்துலட்சுமி என்ற பெண்ணின் வீட்டில் தொடர்ந்து உயிரிழப்பு.. அதனால், ஒரு சாமியாரிடம் குறி கேட்க சென்றார்... அந்த சாமியாரும், 10 ரூபாய் எலுமிச்சம் பழத்தைப் பறக்கவிட்டு புதையல் எடுத்துத் தருவதாக 81,000 ரூபாயைப் பறித்துச் சென்று விட்டார்.. மணி, முருகேசன், ராசு ஆகிய மூன்று போலிச் சாமியார்களைக் கைது செய்த காவலர்கள், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 கி வீரமணி

கி வீரமணி

அவர்களிடம் இருந்து 23 பித்தளை சிலைகள், ரூ.81,000 ரொக்கம், இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.. சாமியார் பேச்சை கேட்டு, முத்துலட்சுமி, ஆங்காங்கே கடன் வாங்கி ரூ.75,000 கொடுத்து புதையலை எடுக்க சொல்லி, பூசைச் செலவுக்கும் ரூ.6,000 தந்து ஏமாந்தார். அதாவது, "பக்தி, கடவுள், மதப் போர்வையில் இந்த மோசடிகளை காவி வேடமிட்ட பலரும் தந்திரக்காரர்களும் அதே விஞ்ஞான உத்திகளைக் கொண்டே மக்களை ஏமாற்றுவதற்கு மூலக் கருவியாகவும் பயன்படுத்துவது இன்னும் பல மடங்கு நம்மை வேதனையடையச் செய்கிறது,..

 மந்திரமல்ல, தந்திரமே

மந்திரமல்ல, தந்திரமே

அறிவியல் சிந்தனை தேவைப் படும் சமூகநலப் பிரச்சினையாகப் பார்க்க 'மந்திரமல்ல; தந்திரமே' என்று விளக்கிடும் நிகழ்ச்சிகளும் விளக்கவுரைகளும், விழிப்புணர்வுக் கூட்டங்களும் நடத்துவதே உடனடியான மனநல சிகிச்சையும், தீர்வும் ஆகும் என்று கி.வீரமணி விளக்கமாக கூறியிருந்த நிலையில், அடுத்த 4 நாட்களிலேயே இதுபோல எலுமிச்சம்பழத்தை வைத்து ஒரு மோசடி புதுச்சேரியில் நடந்துவிட்டது.. இப்போதும் அதே எலுமிச்சம்பழத்தை வைத்து மோசடி நாமக்கல் மாவட்டத்தில் நடந்துள்ளது..

 பழனியம்மாள்

பழனியம்மாள்

பள்ளிபாளையம் அருகே வெடியரசம்பாளையம் என்ற பகுதியில் ஜவுளி அதிபர் ஜெயபிரகாஷ் குடியிருந்து வருகிறார்.. இவரது அப்பா மணி 70, அம்மா பழனியம்மாள் இருவரும் கடந்த 8ம் தேதி வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.. அப்போது காரில் வீட்டுக்கு வந்த 12 பேர் கொண்ட கும்பல், மணியை கட்டிபோட்டு பழனியம்மாளை மிரட்டி, வீட்டில் இருந்த ரூ.28 லட்சம், 18 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டது.. உடனே போலீசில் புகார் தரப்பட்டதையடுத்து, 5 டீம் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

 ஜவுளி அதிபர்

ஜவுளி அதிபர்

இந்நிலையில், வாகன சோதனையில் சந்தேகத்தின்பேரில் ஒரு காரை நிறுத்தி விசாரணை நடத்தியபோது, அவர்கள் உளறி கொட்டினர்.. அப்போதுதான், தீவிர விசாரணை அவர்களிடம் நடத்தியதில், அந்த 4 பேரும் ஜவுளி அதிபர் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என்பது உறுதியானது.. பள்ளிபாளையம் போலீசாரிடமும் ஒப்படைக்கப்பட்டனர்.. அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சத்து 2,500 மற்றும் வாடகை கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது... இதனை தொடர்ந்து 4 பேர் அளித்த தகவலின்பேரில், மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த 7 பேரிடம் போலீசில் வாக்குமூலம் தந்தனர்.

 ராமராஜன்

ராமராஜன்

அந்த ஜவுளிகடை ஓனர் வீட்டில் டிரைவராக வேலை பார்த்தவர் ராமதாஜ்.. 38 வயதாகிறது.. இந்த டிரைவருக்கு, ஜவுளி அதிபர் வீட்டில் நகையை கொள்ளை அடிக்கும்படி ஐடியா தந்ததே திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு சாமியார்தானாம்.. ராமராஜ் அடிக்கடி திருவண்ணாமலைக்கு போகும்போது, அந்த சாமியாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அப்போது புதையல் ஆசையை ராமராஜுக்கு சாமியார் தூண்டிவிட்டுள்ளார்.. இதனால் பணத்தாசை பிடித்த ராமராஜ், தான் வேலை பார்க்கும் ஜவுளி அதிபர் வீட்டை பற்றி சொல்லி உள்ளார்.. சிறப்பு பூஜை செய்தால், செல்வம் விருத்தியாகும் என்று அந்த வீட்டில் உள்ளவர்களிடம் பேசி, சாமியாரை அழைத்துக் கொண்டு, ஜவுளி அதிபர் வீட்டுக்கு சென்றுள்ளார் டிரைவர்..

 ஓனர் எங்கே

ஓனர் எங்கே

அந்த வீட்டில் ஏகப்பட்ட பணம், நகை இருப்பதை சாமியாரும் பார்த்துவிட்டார்.. சிறப்பு பூஜை என்ற பெயரில், பையில் இருந்து எலுமிச்சம்பழத்தை எடுத்துள்ளார்.. அந்த பழத்தை அந்தரத்திலேயே பறக்க விட்டாராம்.. அதில்தான் அந்த வீட்டில் உள்ளவர்கள் கவிழ்ந்துள்ளனர்.. இதற்கு பிறகு, அந்த வீட்டிலிருந்த நகையை கொள்ளையடிக்க நினைத்த சாமியார், மதுரையில் இருந்து ஆட்களை தயார் செய்துள்ளார்.. அதன்படி காரில் 12 பேர் கொண்ட கும்பல் ஜவுளிக்கடை வீட்டுக்கு சென்று அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு சேலத்துக்கு தப்பி விட்டது.

 எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழம்

ஒன்றாக சேர்ந்திருந்தால் ஆபத்து என்பதால், தனித்தனியாக 2 குழுக்களாக பிரிந்துசென்றுள்ளதும் தெரியவந்துள்ளது.. இப்போது 7 மட்டும்தான் கைதாகி உள்ளனர்.. இன்னும் 5 பேரை போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.. அந்த 5 பேரில் முக்கியமானவர்களே அந்த டிரைவரும், சாமியாரும்தான்... மிச்ச பணம் இவர்களிடம்தான் உள்ளதுபோல் தெரிகிறது.. முத்துலட்சுமி குறித்து கி.வீரமணி அலர்ட் செய்திருந்தபோதே உஷாராகி இருந்திருந்தால், இப்படி ஒரு கொடுமை நடந்திருக்குமா? ஒரே ஒரு எலுமிச்சம்பழத்தை காட்டி, 28 லட்சம் ரூபாய் + 18 சவரன் நகையை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை என்னவென்று சொல்வது???

English summary
18,00,000 Rs: why did Samiyar go to Businessmans house and 7 people were arrested by Namakkal police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X