அதிவேகம்.. மரத்தில் மோதி நொறுங்கிய கார்.. திருவிழாவுக்கு போன 4 இளைஞர்கள் பலி.. நாமக்கல் அருகே சோகம்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் என்ற இடத்தில், சாலையோரம் இருந்த பனை மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சீராம்பாளையத்தில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிழக்கு தொட்டிபாளையத்தைச் சேர்ந்த லோகேஷ், தனசேகர், கவின், சிவா, ஸ்ரீதர் ஆகிய இளைஞர்கள் சொகுசு காரில் சீராம்பாளையம் நோக்கிச் சென்றுள்ளனர்.
தனசேகர், காரை ஓட்டிச் சென்ற நிலையில், அதிவேகம் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையைக் கடந்து மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் லோகேஷ், தனசேகர், கவின், சிவா, ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, லேசான காயங்களுடன் ஸ்ரீதர் என்பவர் உயிர் தப்பியுள்ளார்.
கார் விபத்தில் காயமடைந்த ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்த 4 இளைஞர்களின் உடல்களையும் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications