"மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
நாமக்கல்: லேக்சபா தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் அமைச்சர் மதிவேந்தன் பேசிக் கொண்டு இருக்கும் போதே திடீரென பெண் ஒருவர் எழுந்து தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று முறையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கே தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் எனப் பல முனை போட்டி நிலவுகிறது. இதனால் பிரச்சாரம் இப்போதே தீவிரமடைந்து இருக்கிறது.
நாமக்கல்: அதன்படி நாமக்கல் தொகுதி இந்த முறை திமுக கூட்டணியில் உள்ள கொமதேகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே கொமதேக சார்பில் மாதேஷ்வரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொமதேக வேட்பாளர் மாதேஷ்வரனுக்கு ஆதரவாக திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. அதன்படி வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொள்ளும் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென எழுந்த பெண் ஒருவர் தனக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்கவில்லை என்று நேரடியாக அமைச்சரிடம் முறையிட்டார். அப்போது அருகே இருந்தவர்கள், "அமைச்சர் பேசுகிறாரேம்மா.. போய் உட்காருங்க.. பேசி முடிச்சதும் கேட்பாரு" என்று சொல்லி அந்த பெண்ணை அமர வைத்தனர்.
முறையிட்ட பெண்: அமைச்சர் மதிவேந்தனும் சொன்னபடியே தனது பேச்சை முடித்தவுடன் அந்த பெண்ணை அழைத்து என்ன பிரச்சினை எனக் கேட்டார். மகளிர் உரிமை தொகையைப் பெறுவதில் தனக்குப் பிரச்சினை இருப்பதாக அந்தப் பெண் தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக மேடையில் இருந்தபடியே அதிகாரிகளுக்கு போன் போட்ட அமைச்சர் மதிவேந்தன், "மகளிர் உரிமை தொகை பதிவு பண்ணும் போது பிரச்சினை வந்ததாம். அது என்னனு பாருங்க.
தேர்தல் முடிந்த பிறகு அது என்ன விவகாரம் எனப் பார்த்து நடவடிக்கை எடுங்கள்.. நான் அந்த பெண்ணை அலுவலகத்திற்கு வரச் சொல்கிறேன். என்ன பண்ண முடியும்னு பாருங்க" என்று அவர் அறிவுறுத்தினார். பிறகு அந்த பெண்ணிடம் தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் இந்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் என்று சொல்லி அந்த பெண்ணை அனுப்பி வைத்தார். இது தொடர்பாக வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மகளிர் உரிமை தொகை: பெண்களுக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை கடந்தாண்டு திமுக அரசு கொண்டு வந்தது. குறிப்பிட்ட சில நிபந்தனைகளை விதித்த தமிழ்நாடு அரசு, அவர்களுக்கு மட்டுமே மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், சில பெண்கள் தங்களுக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை என்று தொடர்ந்து புகார் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் லோக்சபா தொகுதியைப் பொறுத்தவரைக் கடந்த முறை திமுகவின் சின்ராசு என்பவர் வெற்றி பெற்று இருந்தார். இந்த முறை அங்கே உதயசூரியன் சின்னத்தில் கொமதேகவின் மாதேஷ்வரன் போட்டியிடுகிறார். அங்கே அதிமுக சார்பில் தமிழ் மணி போட்டியிடும் நிலையில், பாஜகவில் இருந்து கேபி ராமலிங்கம், நாம் தமிழர் கட்சியில் கனிமொழி ஆகியோர் களமிறங்குகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications