Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாமக்கல்லில் களவாணி பட பாணியில் .. காதலிக்கு காருக்குள் தாலி கட்டிய இன்ஜினியர்.. செம்ம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த அஜய் என்பவர் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் நாமக்கல்லைச் சேர்ந்த நந்தினி என்ற இன்ஜினியரிங் மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் சில ஆண்டுகளாக பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நந்தினிக்கு அவரது தந்தை முன்னிலையிலேயே களவாணி பட பாணியில், காருக்குள் வைத்து அஜய் தாலி கட்டியுள்ளார். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

களவாணி திரைப்படத்தில் பள்ளி மாணவியான ஓவியாவை, எந்த வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றும் விமல் காதலிப்பது போல் காட்சிகள் இருக்கும். அந்த காதலுக்கு காதலியின் அண்ணன் கடுமையாக எதிர்ப்பது போல் இருக்கும். எதிர்ப்பை மீறி ஓவியாவும், விமல் திருமணம் செய்து கொள்வார்கள்.

An engineer in Namakkal tied a talisman to his girlfriend in car in the style of the movie Kalavani

அதற்காக ஓவியாவை பெற்றவர்கள் முன்னிலையிலேயே ஏமாற்றி விமல் காரில் கடத்தி செல்வார். அத்துடன் உறவினர்கள் முன்னிலையில் காரில் வைத்தே ஓவியாவிற்கு தாலி கட்டுவார். காருக்குள் வைத்து தாலி கட்டுவது சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் நடந்துள்ளது. அதுவும் பெண்ணின் அப்பாவின் முன்னிலையிலேயே நடந்துள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

நாமக்கல் காதல்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகர் கோனேரிப்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடைய மகன் அஜய்க்கு 26 வயது ஆகிறது. இவர் என்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவருடைய உறவினரான நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்த தண்டபாணி என்பவருடைய மகள் நந்தினியும் (21) என்ஜினிரியங் கல்லூரியில் படித்து வருகிறார். அஜய்யும் நந்தினியும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்களாம். இவர்களின் காதலுக்கு நந்தினியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அதனால் இருவரும் குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதாக தெரிகிறது.

கல்லூரிக்கு சென்று வந்தார்

இதனிடையே நேற்று வழக்கம்போல் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரிக்கு நந்தினி சென்றார். மாலையில் அவர் பஸ்ஸில் நாமக்கல்லுக்கு வந்து இறங்கியுள்ளார். பின்னர் ஏற்கனவே திட்டமிட்டபடி, நாமக்கல்லில் உள்ள சேலம் சாலை சந்திப்பில் அஜய் மற்றும் அவரது உறவினர்கள் யுவராஜ், ஜெயலட்சுமி ஆகியோர் உள்பட 4 பேர் காத்திருந்த காரில் நந்தினி ஏறியிருக்கிறார்.

தந்தை முன்னிலையில் காரில் நந்தினி

இதனிடையே மாணவியை அழைத்து செல்ல அங்கு வந்த அவரது தந்தை தண்டபாணி மகள் காதலனுடன் காரில் ஏறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். மேலும் அவர் அஜய் மற்றும் உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.. பின்னர் உறவினர்கள் சிலரை செல்போனில் தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வரவழைத்து தகராறில் ஈடுபட்டார்.

காருக்குள் தாலி கட்டினார்

அப்போது காருக்குள் சென்ற அஜய் தான் கையில் வைத்திருந்த தாலியை நந்தினியின் கழுத்தில் கட்டியிருக்கிறார். மேலும் அவர்கள் இருவரும் மோதிரமும் மாற்றி கொண்டதாக கூறப்படகிறது. காருக்குள் தனது கண் முன்னே மகளுக்கு காதலன் தாலி கட்டியதை கண்டு ஆத்திரமடைந்த தண்டபாணி மற்றும் உறவினர்கள் காரின் கண்ணாடிகளை உடைத்தனர். மேலும் காரில் இருந்த அஜய்யை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இறுதியில் சமரசம்

சம்பவத்தை கண்ட போக்குவரத்து போலீசார் பொதுமக்களின் உதவியோடு, அஜய், நந்தினி உள்ளிட்ட 5 பேரை மீட்டு நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அஜய்யை விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டதாக நந்தினி கூறினார். இதையடுத்து இருதரப்பினரையும் அழைத்து பேசினார்கள். இறுதியில் சமரசம் ஏற்பட்டது. காதல் ஜோடி மகிழ்ச்சியாக காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். களவாணி திரைப்படத்தில் வருவது போல காருக்குள் வைத்து காதலிக்கு தாலி கட்டிய சம்பவம் நாமக்கல்லில் பேசுபொருளாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+