நாமக்கல் நதியா.. தூங்கும்போது "மாமனார்" கிட்ட வந்து உட்கார்ந்துப்பாராம்.. போலீசுக்கு ஒரே ஓட்டம்..ஏன்
நாமக்கல்: 20 வயது இளம்பெண் ஒருவர் போலீசுக்கு போயுள்ளார்.. இதுகுறித்து மகளிர் போலீசாரும் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.. என்ன நடந்தது?
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார், வள்ளியப்பம்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர்.. இவருக்கு 25 வயதாகிறது.. அமெரிக்காவில் கேட்டரிங் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி பெயர் நதியா.. 20 வயதாகிறது.. கணவர் வெளிநாட்டில் இருப்பதால், மாமியார் வீட்டிலேயே நதியா வசித்து வந்திருக்கிறார்.
வீரப்பன்: சந்திரசேகரின் அப்பா பெயர் வீரப்பன்.. இவர்தான் பாலியல் டார்ச்சரை நதியாவுக்கு தந்திருக்கிறார்.. நதியா வீட்டில் தனியாக இருக்கும் நேரத்திலும், இரவில் தூங்கும்போதும், வீரப்பன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.. மாமனாரின் சேட்டைகளுக்கு நதியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. அதற்கு அந்த மாமனார், தன்னிடமுள்ள சொத்துக்களை தந்துவிடுவதாகவும், எவ்வளவு பணம் கேட்டாலும் தருவதாகவும், தன்னிடம் அனுசரித்து சென்றுவிடுமாறும் சொல்லி உள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ந்து போன நதியா, தன்னுடைய மாமியார் தமிழ்செல்வியிடம் புகார் சொல்லி உள்ளார்.. ஆனால் எத்தனையோ முறை புகார்களை சொல்லியும் மாமியார் எதையுமே தன்னுடைய காதில் போட்டுக் கொள்ளவில்லையாம்..
இதற்கு பிறகு, கணவர் வெளிநாட்டிலிருந்து லீவில் வந்திருக்கிறார்.. உடனே அவரிடமும் நடந்ததை எல்லாம் சொல்லி, தனிக்குடித்தனம் போய்விடலாம் என்று சொன்னாராம் நதியா. ஆனால், இதற்கு கணவர் மறுத்துள்ளார்.
கேட்டரிங்: இதனால் என்ன செய்வதென்றே தெரியாமல், ப.வேலுார் மகளிர் போலீசுக்கு சென்றுவிட்டார் நதியா.. ஒரு புகார் மனுவை தந்திருக்கிறார்.. அந்த மனுவில், "கடந்த 2020-ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது... எனது கணவர் கேட்டரிங் முடித்து விட்டு அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இதனால் திருமணம் முடிந்ததுமே, அவர் அமெரிக்காவிற்கு சென்றுவிட்டார். இதனால் நான் மாமனார் வீட்டில் வசித்து வந்தேன்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் எனது மாமனார் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். இதுகுறித்து மாமியாரிடம் கூறியபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே பாலியல் தொல்லை புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, சம்பந்தப்பட்ட மாமனார், மாமியார் மீது வழக்குப்பதிவு செய்தார்.. ஆனால், நதியா போலீஸ் ஸ்டேஷன் சென்ற அடுத்த செகண்டே, மாமனார், மாமியார் ஜோடி எஸ்கேப் ஆகிவிட்டது. அவர்களை மகளிர் போலீஸ் தேடி கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கில் கணவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
புகார்கள்: முதலில் தனிக்குடித்தனத்துக்கு ஓகே சொன்னாராம்.. பிறகு திடுதிடுப்பென மனம் மாறிவிட்டாராம்.. தன்னுடைய தந்தையிடம் இதை பற்றி எதுவுமே விசாரிக்கவில்லையாம். இது தொடர்பான விசாரணைகளும் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications