இந்த உருட்டுற வேலை எல்லாம் எங்ககிட்ட வேணாம்.. பட்டுனு ஆதாரத்த சொல்லணும்: அண்ணாமலைக்கு ஈஸ்வரன் பதிலடி
நாமக்கல்: இந்த உருட்டுற வேலை எல்லாம் எங்கக்கிட்ட வேண்டாம். கேட்கும் கேள்விக்கு மட்டும் நேரடியாகப் பதில் சொல்லுங்க என அண்ணாமலைக்கு சவால் விட்டுள்ளார் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஈஸ்வரன்.
பாஜவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்செங்கோட்டில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்ட போது, திருச்செங்கோடு தொகுதி எம்.எல்.ஏ ஈஸ்வரனை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். சட்டமன்றத்தில் அமைச்சர் உதயநிதிக்கு துதிபாடும் வேலையைத் தான் செய்கிறார் ஈஸ்வரன். தனியாக கட்சி நடத்துவதற்குப் பதிலாக அவர் திமுகவிலேயே இணைந்து விடலாம் என விமர்சித்தார் அண்ணாமலை.

அண்ணாமலைக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஈஸ்வரன் பதிலடி கொடுத்திருந்தார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் பேச வேண்டும். இரண்டரை ஆண்டு காலத்தில் சட்டமன்றத்தில் நான் உதயநிதி பற்றி பேசியிருந்தால் ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என சவால் விடுத்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஈஸ்வரன், "அருமைத்தம்பி அண்ணாமலை அவர்களே.. இந்த உருட்டுற வேலை எல்லாம் எங்கக்கிட்ட வேண்டாம். கேட்கும் கேள்விக்கு மட்டும் நேரடியாகப் பதில் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு மடைமாற்றும் பேச்சுகளை எல்லாம் வேறு இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அமைச்சர் உதயநிதிக்கு துதிபாடும் வேலையைத் தான் ஈஸ்வரன் செய்கிறார் என திருச்செங்கோட்டில் பேசி இருக்கிறீர்கள். அதற்கு நான் மறுப்பு தெரிவித்துள்ளேன். நீங்கள் சொன்னது உண்மை என நிரூபிக்க முடியும் என்றால் அதற்கான ஆதாரங்கள் கொடுங்கள். அதை விட்டுவிட்டு மற்ற இடங்களைப் போல உருட்டும் வேலை வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, "எனது செயல்பாடு பற்றி பேசுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால், ஏதோ குறை சொல்ல வேண்டும் என்றே பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனது தொகுதிக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் சட்டமன்றத்தில் நான் பேசியுள்ளேன். இந்த விவகாரத்தில் என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க அண்ணாமலை தயாரா? எங்கே எப்போது என ஊடகங்கள் முன்னிலையில் அண்ணாமலை சொல்ல வேண்டும்.
கடந்த 30 மாதங்களில் பலமுறை நான் சட்டமன்றத்திலே பேசியிருக்கிறேன். சட்டமன்ற உரை என்பது மேடைப்பேச்சு போல் அல்ல. பேசிய எல்லாவற்றையும் ஒரு வார்த்தை விடாமல் ஆவணப்படுத்தப்பட்டு சட்டமன்ற நூலகத்தில் இருக்கிறது. அதை எப்போது வேண்டுமென்றாலும் படிக்க முடியும். நான் உதயநிதி பற்றி சட்டசபையில் புகழ்ந்து பேசியதாக அண்ணாமலையால் நிரூபிக்க முடியுமா? இல்லையென்றால் நான் பேசியது தவறு என அண்ணாமலை ஒப்புக் கொள்ள வேண்டும்" என சவால் விட்டிருந்தார் ஈஸ்வரன்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார்












Click it and Unblock the Notifications