பேஸ்புக்கில் கூடா நட்பு.. மாணவியை ஆபாச படம் எடுத்து தமிழ்செல்வன் செய்த பகீர்.. நாமக்கல்லில் பரபரப்பு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி உடன் பேஸ்புக் மூலம் பழகிய இளைஞர் ஒருவர், ஆபாச புகைப்படம் எடுத்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டி உள்ளார். அந்த இளைஞரை ராசிபுரம் போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
பேஸ்புக்கில் பள்ளி மாணவிகளுக்கு வரும் முன்பின் தெரியாத நட்பு கோரிக்கைகள் பெரும்பாலும் ஆபத்தையே தருகின்றன. மாணவியின் புரொபைல் படம் அழகாக இருந்தால் ஜொல்லுவிடுவதற்கு என்றே பெரும் கூட்டங்கள் உள்ளது.
இளைஞர்கள் தான் இந்த விஷயத்தை செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டும்,. நடுத்த வயது, ஏன் முதியவர்கள் கூட சல்லாப நோக்கத்துடன் பேஸ்புக்கில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுடன் பழக முயற்சிக்கிறார்கள்.

சீரழிகிறார்கள்
இப்படி பழகுபவர்களை இனம் காணத் தெரியாத சிறுமிகள் சிலர் இளைஞர்களின் காதல் பேச்சில் மயங்கி சீரழிவது நடக்கிறது. பெற்றோரின் அஜாக்கிரதை காரணமாக நடக்கும் சம்பவங்கள் என்றுகூட இதை சொல்லலாம். அப்படியான ஒரு சம்பவம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நடந்துள்ளது.

காதல் மலர்ந்தது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி மீனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞருடன் பேஸ்புக்கில் நண்பராகி உள்ளார். ஆசைவார்த்தைகளை பேசி பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி உள்ளார் தமிழ்செல்வன். ஒருகட்டத்தில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

ஆபாசமாக புகைப்படம்
கடந்த 5 மாதங்களாக வீடியோ காலில் பேசி பழகிய தமிழ்செல்வன், மாணவி மீனாவை ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார். பின்னர் புகைப்படங்களை செல்போனுக்கு அனுப்பி தனது ஆசைக்கு இணங்குமாறும், இல்லையெனில் இணையத்தில் வெளியிடபோவதாகவும் தொடர்ந்து மிரட்டி இருக்கிறார்.

போலீசார் அதிரடி
இதனால், பயந்துபோன மாணவி, பேஸ்புக்கில் தமிழ்செல்வன் செய்த அட்டூழியங்களை தன் தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீனாவின் தாயார், ராசிபுரம் மகளிர் காவல்நிலையத்தில் நடந்த விவரங்களை கூறி, புகார் அளித்தார். இதனையடுத்து தமிழ்செல்வனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆபாச புகைப்படங்களை பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications