நாமக்கல்லில் முட்டை தொட்ட புதிய சாதனை! தங்கத்தையே ஓவர்டேக் பண்ணுமோ? கோழி பண்ணை வரலாற்றில் முதல்முறை
நாமக்கல்: நாமக்கல் முட்டையின் கொள்முதல் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து கொண்டே வருவதால் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். எனினும், இனி வரும் நாட்களில் முட்டைகள் உயர வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இப்போது நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு முட்டை கொள்முதல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. முட்டை விலை உயர்வுக்கு என்ன காரணம்? கோழிப் பண்ணையாளர்கள் சொல்வது என்ன?
நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன.. இதனால் இங்கு கிட்டத்தட்ட 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

இந்த கோழிப்பண்ணைகளில் நாள்தோறும் 7 கோடிக்கும் அதிகமான முட்டைக்கோழிகள் வளர்க்கப்பட்டு கிட்டத்தட்ட 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நாமக்கல் முட்டைகள்
இதில் 40 சதவீதம் கேரள மாநிலத்திற்கும், மேலும் தினசரி 30 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மிச்சமுள்ள தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் மாநிலத்தின் பிற சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகின்றன.. ஆனால், சமீபகாலமாகவே முட்டை விலைகள் உயர்ந்து வருகின்றன. அதிலும், தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் கடந்த 55 வருடங்களாக இல்லாத வகையில் முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
குளிர் காலத்தில் விலை உயர்வு
பெரும்பாலும், குளிர்கால நேரங்களில் முட்டைக்கு தேவை அதிகமாகவே இருக்கும் என்பார்கள்.. எப்படியும் ஒரு மாத காலத்துக்கு குளிர் நீடிக்கும் என்பதால் முட்டையின் விலையும் அதிகமாகும் என்ற கலக்கமும் பொதுமக்களிடம் சூழ்ந்துள்ளது..
கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரித்தல் போன்ற காரணங்களால் முட்டை இந்த உயர்வுக்கு பின்னணியாக உள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சொல்லி வரும் போது, தற்போது மீண்டும் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
நாமக்கல் கோழிப் பண்ணைகள்
ஆம், சமீப காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வந்த முட்டை விலை, நேற்று நடைபெற்ற நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.6.40 ஆக உயர்ந்துள்ளது. இது நாமக்கல் மண்டலத்தில் இதுவரை பதிவாகாத உச்ச விலை என கோழிப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக ரூ.6.30 ஆக இருந்த கொள்முதல் விலை, இன்று ரூ.6.35 ஆகவும் பிறகு ரூ.6.40 ஆகவும் உயர்ந்துள்ளது. கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இதன் எதிரொலியாக சில்லறை சந்தையில் முட்டை விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
தங்கம் போல உயரும் கோழி முட்டை
தற்போது பல பகுதிகளில் ஒரு முட்டை குறைந்தபட்சமாக ரூ.7.50 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
வடமாநிலங்களில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக முட்டை நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்கள் சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்லாமல், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதால் கேக் மற்றும் பேக்கரி தயாரிப்புகளுக்காக முட்டையின் தேவை பல மடங்கு உயர்ந்துள்ளது.
எனினும், தேவைக்கு ஏற்ப முட்டை உற்பத்தி இல்லாததே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications