நாமக்கல்லில் சரிந்த ஆடுகள்.. சந்தைக்கு வந்த "செம்பு கிடா, சண்ட கிடா".. இது கார்த்திகை விரதம் தீவிரம்
நாமக்கல்: கார்த்திகை மாதம் துவங்கி நடந்து வரும் நிலையில், பெரும்பாலான பக்தர்கள், விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்ல துவங்கியிருக்கிறார்கள்.. இதையடுத்து, இறைச்சி விற்பனை மந்தமாகியிருக்கிறதாம். குறிப்பாக, ஆட்டுச்சந்தைகளில் வியாபாரம் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் மீன் மார்க்கெட்டுகள் வியாபாரமின்றி காணப்படும்.. தமிழகத்தில் பெரும்பாலானோர் அசைவம் தவிர்த்து, சைவம் மட்டுமே இந்த புரட்டாசியில் சாப்பிடுவார்கள். இந்த ஒரு மாதத்துக்கு இறைச்சியை சாப்பிடாத காரணத்தினால், சிக்கன், மட்டன், மீன் விலை குறைந்து காணப்படும்.

அசைவ பிரியர்கள்: இதனால் அசைவ பிரியர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், இறைச்சி வியாபாரிகளுக்கு பெரிதாக லாபம் கிடைப்பதில்லை... புரட்டாசியை போலவே, கார்த்திகை மாதத்திலும் பலர் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள்..
கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்ப சுவாமியை வேண்டி மண்டல பூஜைக்காக மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவது வழக்கமாகும்.. அந்தவகையில், ஐயப்ப பக்தர்கள் கோவிலில், மாலை அணிவித்து இந்த மாதம் விரதத்தை தொடங்கியிருக்கிறார்கள்.. விரதம் நாட்களில் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவதால், ஆடுகள் விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆட்டுச்சந்தைகள்: கார்த்திகை மாதம் காரணமாக மேலப்பாளையம் சந்தையில் நேற்று ஆடுகள் விற்பனை சரிவை எட்டியிருக்கிறதாம்.. வழக்கத்தை விட குறைவான ஆடுகளே சந்தைக்கு வந்திருந்தது.
தென்மாவட்டங்களிலேயே புகழ்பெற்ற ஆட்டுசந்தைகள் என்றால், அவைகள் எட்டயபுரம் மற்றும் மேலப்பாளையம் சந்தைகளாகும்.. இந்த சந்தைகளுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்து வியாபாரிகள் வருவது வழக்கமாகும்.. செவ்வாய்க்கிழமைகளில் மேலப்பாளையம் ஆட்டு சந்தையில் ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும்... அதேபோல. மாடுகள், கோழிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தனித்தனி இடங்களில் நடப்பது வழக்கமாகும்.
கார்த்திகை மாதம்: ஆனால், கார்த்திகை மாதம் நடந்துவருவதால், சந்தையில் ஆடுகள் விற்பனை சரிந்துவிட்டதாம்.. செம்பு கிடா, சண்ட கிடா என பல வகையான ஆடுகள் கொண்டு வரப்பட்ட நிலையில், இறைச்சிக்கான ஆடுகள் மட்டுமே ஓரளவுக்கு விற்பனை ஆகியிருக்கிறது.. சிலர் மட்டும் குட்டி ஆடுகளை வளர்ப்பதற்காக வாங்கி சென்றிருக்கிறார்கள்.
மற்றபடி எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என்று கவலையுடன் சொல்கிறார்கள் வியாபாரிகள்.. இந்த கார்த்திகை மாதத்தில் கோயில் கொடைகளும் அவ்வளவாக நடப்பதில்லை என்பதால், ஆடுகள் விற்பனை குறைந்துவிட்டதாம்..
நாமக்கல் சந்தை: அதேபோல, நாமக்கல் கொளத்தூர் சந்தையிலும் ஆடுகள் விற்பனை குறைந்துள்ளது.. தீபாவளி முடிந்ததில் இருந்தே ஆடுகள் விலை சரியத்தொடங்கிவிட்டதாம்.. ஆடுகள், 500 முதல், 1,000 ரூபாய் வரை விலை சரிந்துவிட்ட நிலையில், கார்த்திகை, மார்கழியில் ஆடுகள் விலை குறைவாகவே இருக்கும் என்றும் தை இரண்டாம் வாரத்துக்கு பிறகே விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கால்நடை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications