நாமக்கல் "கோழிக்கறி"யின் ஹேப்பி நியூஸ்.. தமிழ்நாட்டு மக்களுக்கு குஷி.. இடிந்துபோன கறிக்கடைக்காரர்கள்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்திலிருந்து தமிழக மக்களுக்கு குட்நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது.. இதைக்கேள்விப்பட்டு அசைவப்பிரியர்கள் மகிழ்ந்து போயிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டை தமிழகத்தை பொறுத்தவரை பண்டிகை காலங்களில் அசைவ உணவுகளை மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.. மாட்டுப்பொங்கல் தினத்தன்று மட்டன், சிக்கன், மீன் என சமைத்து, தங்கள் உற்றார், உறவினருடன் சேர்ந்து உண்பது வழக்கமான ஒன்றாகும்.

அதேபோல தீபாவளி நேரத்தில் அசைவம் இல்லாத விருந்து கிடையாது. எனவே, இத்தகைய விசேஷ நாட்களில் தமிழகத்தின் பிரதான சந்தைகளில் ஆடுகள் விற்பனையும் களைகட்ட துவங்கிவிடும்.
கோழிக்கறியை பொறுத்தவரை, பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும் 40 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி நடந்து வருகிறது. இந்த மாவட்டத்திலிருந்துதான், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு கறிக்கோழிகள் பெரும்பாலும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது..
பல்லடம் : அதேபோல, பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.. கறிக்கோழி நுகர்வு அதிகரிக்கும்போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும்போது, விலை குறைவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.
கறிக்கோழியை போலவே, நாமக்கல் முட்டைகளுக்கும் பெரும் கிராக்கி உள்ளது.. இதற்கு காரணம், நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன.. கிட்டத்தட்ட 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதிலிருந்து தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
விலை உயர்வு: இந்த முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கும், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி போக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.. ஆனால், சமீபகாலமாகவே முட்டை விலைகள் உயர்ந்து வருகின்றன.. கடந்த மாதமே இந்த விலை உயர்வானது பெருத்த கவலையை அசைவப்பிரியர்களிடம் ஏற்படுத்தியிருந்தது.
இந்த விலை உயர்வு குறித்து, முட்டைக் கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் தரப்பில் சொன்னபோது, பொங்கல், தைப்பூசம் முடிந்துள்ளதால் தமிழகத்தில் நுகர்வு அதிகரித்துள்ளது.. 50 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தியும் சரிந்துள்ளதால், கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.. எனவே, இனி வரும் நாட்களிலும் கோழிக்கறி விலை உயர வாய்ப்புள்ளது" என்று கவலையுடன் கூறியிருந்தனர்.
விலை குறைவு: இப்படிப்பட்ட சூழலில், இந்நிலையில், திடீரென முட்டை விலை தற்போது சரிந்துள்ளது.. முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைந்து ரூ.4.80 க்கு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் என்ன தெரியுமா? கார்த்திகை மாதத்தில் மக்கள் முட்டைகளை வாங்காமல் இருப்பதால் முட்டைகள் அதிகம் தேக்கமடைந்து வீணாகி விடுகின்றனவாம்..
திடீர் முடிவு: இதுகுறித்து பணியாளர்கள் தொடர்ந்து தகவலை தெரிவித்து வந்தநிலையில், இதனை அவர்கள் கருத்தில் கொண்டு, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் உடனடியாக நடத்தப்பட்டுள்ளது.. இந்த கூட்டத்தில் பணியாளர்கள் முட்டைகளின் விலையை மாற்றம் செய்வது குறித்தும் ஆலோசனைய மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில்தான், பண்ணை கொள்முதல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.80 தாக ஒரு முட்டையின் விலை என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.. இது மட்டுமல்லாமல், முட்டை விலை இனிவரும் நாட்களிலும் குறைய வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மகிழ்ச்சி: ஆக, முட்டை விலை மேலும் உயரும் என்று கலக்கத்திலிருந்த இறைச்சி பிரியர்கள், திடீரென முட்டைகளின் விலை குறைக்கப்பட்டதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications