கூட்டுப்பட்டா, தனிப் பட்டா.. நிலத்தை அளவீடு செய்ய வந்த சர்வேயர்.. அரசு ஊழியர்களே இப்படி செய்யலாமா?
நாமக்கல்: தமிழக வருவாய்த்துறை, பதிவுத்துறைகளில் லஞ்ச சம்பவங்கள் பெருகி வருகின்றன. இதன் காரணமாக, அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அடிக்கடி கைதாகி வருகிறார்கள். கைதான நபர்களுக்கு கோர்ட்களில் தண்டனைகளும், தரப்பட்டு வருகின்றன. இருந்தாலும், கைது நடவடிக்கைகள் லஞ்சத்தின் பேரில் பெருகியபடியே உள்ளது. இதோ நேற்று ஒரே நாளில் 2 அரசு அதிகாரிகள் கைதாகி உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
நெல்லை மாவட்டம், பணகுடியை சேர்ந்தவர் செல்வக்குமார்.. இவர் ஒரு விவசாயி. இவர் மீது தென்காசி மாவட்டம் கடையம் போலீஸ் நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இது தொடர்பாக கோர்ட் உத்தரவின் பேரில் செல்வக்குமார், கடையம் போலீஸ் ஸ்டேஷனில் தினமும் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்டு வருகிறார்.

அரசு அதிகாரிகள்
இதனிடையே, கடந்த 11ம் தேதி கையெழுத்திட அவர் வந்தபோது இன்ஸ்பெக்டரை சந்திக்குமாறு போலீசார் சொன்னார்கள்.. எனவே, இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதாவை வழக்கு தொடர்பாக சந்தித்தார். அப்போது செல்வக்குமாரிடம் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை விடுவிக்க ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கேட்டாராம் மேரிஜெமிதா..
தென்காசி சர்வேயர்
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்வக்குமார் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார், செல்வக்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரத்தை கொடுத்தனர். அதனை இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதாவிடம் செல்வக்குமார் தந்தபோது, அங்கு மறைந்திருந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பெண் இன்ஸ்பெக்டரை கைது செய்தனர்.
அதேபோல, நாமக்கல் மாவட்டத்திலும் ஒரு அதிகாரி கைதாகி உள்ளார்.. திருச்செங்கோட்டை சேர்ந்த விஜயகுமாரி என்பவருக்கு, தன்னுடைய நிலத்தை அளவீடு செய்து கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டாவாக மாற்றித் தர விண்ணப்பிக்க வேண்டியிருந்தது.. இதற்காக திருச்செங்கோடு தாலுகா அலுவலகத்தில் பணியாற்றி வந்த சர்வேயர் பூபதியை அணுகினார்.. அப்போது பட்டாவை மாற்ற லஞ்சம் தர வேண்டும் பூபதி கேட்டாராம்.
கூட்டுப்பட்டா
லஞ்சம் கொடுக்க விரும்பாத விஜயகுமாரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களது, ஆலோசனைப்படி, விஜயகுமாரி ரசாயனம் தடவிய ரூ.9 ஆயிரம் லஞ்சப்பணத்தை தந்துள்ளார்.. இந்த பணத்தை பூபதி வாங்கியதுமே அங்கு மறைவாக இருந்த அதிகாரிகள், சுற்றி வளைத்து கைது செய்தனர்.. இது தொடர்பாக போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
இப்படி நாள்தோறும் அரசு ஊழியர்களும், அரசு அதிகாரிகளும் கைதாகி கொண்டிருப்பது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது. அதிலும் பெண் அதிகாரிகளும் இதில் பொதுவெளியில் கைதாகி அசிங்கப்பட்டு வருவது மக்களுக்கு கவலையை, அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications