ஓவர் நெருக்கம்.. கல்யாணம் செஞ்சு வச்சு பிரிச்சிருவாங்களோ.. பயந்து போன தோழிகள்.. ஒரே சேலையில்!
நெருங்கிய தோழிகள் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்
நாமக்கல்: ஓவர் நெருக்கம்.. கல்யாணம் ஆனால் எங்கே பிரிந்துவிடுவோமா என்று பயந்து 2 தோழிகளும் ஒரே சேலையில் ரூமுக்குள் தூக்கு போட்டு தொங்கிவிட்டனர்.
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ளது கோக்கலை எளையாம்பாளையம்.. இங்கு வசித்து வந்த தம்பதி நந்தகுமார் - ஜோதி. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

ஜோதிக்கு வயது 23.. கணவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார்.. ஜோதியின் பெற்றோர் கேரளாவில் கூலி வேலை செய்து வருவதால், அவர்களுடன் 6 மாதமாக தங்கியிருந்தார் ஜோதி. அங்கு ஒரு தறிபட்டறையில் வேலைக்கும் சேர்ந்தார். அதே தறிப்பட்டறையில் பிரியா என்பவர் வேலை பார்த்து வந்தார்.. பிரியவுக்கு வயது 20.
இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. ஜோதிக்கும், பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது... பழக்கம் நட்பானது.. நட்பு நெருக்கமானது... வேலை முடித்து வீட்டுக்கு வந்தாலும், எப்ப பார்த்ததாலும் போனில் பேசிக் கொண்டே இருந்தனர்.
இந்த நிலையில் வருகிற 27-ந் தேதி பிரியாவுக்கு கல்யாணம் முடிவாகி இருந்தது.. கல்யாணம் நடந்தால் ஜோதியை பிரிய நேரிடுமே என்று பிரியா கவலைப்பட்டுள்ளார்.. மன உளைச்சலுடன் இருந்துள்ளார்.. சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து சைக்கிளில் கிளம்பி ஜோதி வீட்டுக்கு வந்தார்.. இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்... அடுத்த சில நிமிடங்களில் ரெண்டு பேரும் ஒரே புடவையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மதியம் ஆகியும் பிரியா வீட்டுக்கு போன மகள் இன்னும் காணோமே என்று ஜோதியின் பெற்றோர் அவர் வீட்டுக்கு சென்றபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பிறகுதான் பிரியாவின் அம்மாவுக்கும் சந்தேகம் வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.. தோழிகள் இருவருமே ஒரே சேலையில் தொங்கி கொண்டிருந்தனர்.
மகள்களின் சடலத்தை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர்.. எலச்சிபாளையம் போலீசார் தகவலறிந்து வந்து, சடலங்களை கைப்பற்றினர்.. கல்யாணம் ஆனால் பிரிய நேரிடுமே என்று நினைத்து, 2 பேரும் ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications