Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாமக்கல்லின் ராசி அப்படி! ஒருமுறை வென்றால் அடுத்து தோல்வி தான்.. வெல்லுமா கொமதேக.. திக்திக் திமுக

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதி மீண்டும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதியை பொறுத்தமட்டில் ஒருமுறை வெல்லும் கட்சி மறுமுறை ஜெயிப்பது இல்லை என்ற வரலாறு உள்ளது. இத்தகைய சூழலில் கடந்த 2019ல் திமுக கூட்டணியில் வென்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வரும் தேர்தலில் வெல்லுமா? நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியின் வரலாறு என்ன? என்பது பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுக தனது கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை ஏற்கனவே முடிவடைந்த நிலையில் உடன்பாடு ஏற்படவில்லை.

 Lok Sabha Election 2024: Once the party win again will lost, this is history of Namakkal Parliament Constituency

இதையடுத்து இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு குறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினரிடம் திமுக தலைவர்கள் மேற்கொண்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி மீண்டும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தொகுதி ஏற்கனவே கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு வழங்கப்பட்டது. அந்த கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் ஏகேபி சின்ராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் மீண்டும் நாமக்கல் தொகுதி அந்த கட்சிக்கே திமுக தலைமை வழங்கி உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின்பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈஸ்வரன் கையெழுத்திட்டுள்ளனர்.

5 நாடாளுமன்ற தேர்தல்கள்: இந்நிலையில் தான் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் வரும் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வெல்லுமா? அந்த தொகுதியின் வரலாறு என்ன? என்பது பற்றிய விபரம் வருமாறு: அதாவது நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நிலவரப்படி பார்த்தால் மொத்தம் 14,13,599 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நாடாளுமன்ற தொகுதி என்பது சேலம் மாவட்டம் சங்ககிரி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி உள்ளது. இந்த தொகுதி இதுவரை 5 நாடாளுமன்ற தேர்தல்களை மட்டுமே சந்தித்துள்ளது.

1957 தேர்தல்: அதன்படி முதல் முதலாக கடந்த 1957 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட ஈவிகே சம்பத் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 1,82,066 வாக்குகளை பெற்று காங்கிரஸ் வேட்பாளர் எஸ்ஆர் ஆறுமுகத்தை (பெற்ற வாக்குகள் 1,64,221) 17,845 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

1962 தேர்தல்: அதன்பிறகு 1962ம் ஆண்டு மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விகே ராமசாமி வெற்றி பெற்றார். அவர் 1,18,603 ஓட்டுகள் பெற்று 8,951 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் எம்பி வடிவேலுவை (பெற்ற வாக்குகள் 1,09,652)வீழ்த்தினார். அதன்பிறகு தொகுதி மறுவரையின் காரணமாக நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி என்பது கலைக்கப்பட்டது.

2009 தேர்தல்: அதன்பிறகு மீண்டும் 2009ல் தான் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது. சேலம் மாவட்டம் சங்ககிரி, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கம், நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி மீண்டும் உருவாக்கப்பட்டு 2009ல் தேர்தல் நடந்தது. இதில் திமுக வேட்பாளர் எஸ் காந்தி செல்வன் வெற்றி பெற்றார். அவர்3,71,476 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வைரம் தமிழரசியை (பெற்ற வாக்குகள் 2,69,045) 1 லட்சத்து 2 ஆயிரத்த 431 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

2014 தேர்தல்: பிறகு 2014ல் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் பிஆர் சுந்தரம் 5,63,272 ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து சிட்டிங் எம்பியாக களமிறங்கிய காந்தி எஸ் காந்தி செல்வன் 2,68,898 ஓட்டுகள் பெற்று 2 லட்சத்து 94 ஆயிரத்து 374 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

2019 தேர்தல்: இதையடுத்து கடந்த 2019ல் நாடாளுமன்ற தேர்தலின்போது இந்த தொகுதி திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த கட்சியின் சார்பில் ஏகேபி சின்ராஜ் திமுகவின் சின்னமான உதயசூரியனில் போட்டிட்டார். ஏகேபி சின்ராஜ் 6,26,293 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுகவின் காளியப்பன் 3,61 ஆயிரத்து 142 ஓட்டுகள் மட்டுமே பெற்று 2,65,151 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

தொடர் வெற்றி இல்லை: இந்த நாமக்கல் தொகுதியை பொறுத்தமட்டில் மொத்தம் 5 நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளன. இதில் ஒருமுறை ஜெயித்த கட்சி அடுத்த ஆண்டு நடக்கும் மறுதேர்தலில் வெல்வது இல்லை வரலாறு தொடர்ந்து வருகிறது. 1957 ல் சுயேச்சை, 1962ல் காங்கிரஸ், 2009ல் திமுக, 2014ல் அதிமுக, 2019ல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்டவை தான் ஜெயித்துள்ளன. இதனால் வரும் தேர்தலில் மீண்டும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று வரலாற்றை மாற்றுவாரா? இல்லை தொகுதியில் ஒருமுறை ஜெயிக்கும் கட்சி தொடர்ந்து மறுமுறை வெல்வது இல்லை என்ற வரலாறு இந்த தேர்தலிலும் தொடருமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+