டாக்டர் மகேந்திரன் பெரும் பணக்காரர்! Money ஐ அவர் பார்த்துக் கொள்வார்! அமைச்சர் எ.வ.வேலு ஓபன் டாக்!
நாமக்கல்: மக்கள் நீதி மய்யத்திலிருந்து திமுகவில் இணைந்தவரும், திமுக ஐடி விங் மாநில இணைச் செயலாளருமான டாக்டர் மகேந்திரன் பெரும் பணக்காரர் என்றும் Money ஐ அவர் பார்த்துக் கொள்வார் எனவும் பேசியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார். மற்றக் கட்சிகளில் எல்லாம் மாநில அளவிலான பதவிகளை கூட எளிதாக பெற்றுவிடலாம் என்றும் ஆனால் திமுகவில் கிளைச் செயலாளர் ஆவதே பெரிய விஷயம் எனவும் அமைச்சர் எவ வேலு தனது பேச்சின் போது குறிப்பிட்டார்.

குமாரபாளையம் தொகுதியை பொறுத்தவரை Money ஆல் தங்கமணி வென்றதாக நிர்வாகிகள் கூறுகிறார்கள் என்று குறிப்பிட்ட எவ வேலு, அந்த மணியை பணியால் வெல்வதற்காகவே டாக்டர் மகேந்திரனை குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராக முதல்வர் களமிறக்கியிருப்பதாக தெரிவித்தார்.
அதேபோல் தங்கமணியை எதிர்கொள்ளும் அளவுக்கு டாக்டர் மகேந்திரனிடமும் Money நிறைய இருப்பதாகவும் Money ஐ அவர் பார்த்துக் கொள்வார் எனவும் சிலேடையாக பேசினார். தாம் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால் திமுக ஐடி விங் மாநில இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் பெரும் பணக்காரர் என்றும் அதனாலேயே தாம் குறிப்பிட்டுக் கூறியதாகவும் தெரிவித்தார். டாக்டர் மகேந்திரனை பொறுத்தவரை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் சம்பந்தி ஆவார்.

இதனிடையே அமைச்சர் எவ வேலுவின் பேச்சில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டியது என்னவென்றால், மற்றக் கட்சிகளில் எல்லாம் மாநில அளவிலான பதவிகளை கூட எளிதாக பெற்றுவிடலாம் என்றும் ஆனால் திமுகவில் கிளைச் செயலாளர் ஆவதே சிரமம் என்று அவர் பேசியதை தான். ஏற்கனவே திமுகவில் தொண்டர்கள் முன்னேற முடியாது என்ற ஒரு பேச்சு இருந்து வரும் சூழலில் அதனை உறுதி செய்யும் வகையிலேயே அமைச்சர் எவ வேலுவின் பேச்சும் அமைந்திருக்கிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications