ஆஹா.. சுத்தி வளைச்சுட்டாங்களே.. எகிறி ஓடிய "அதிமுக புள்ளி".. தங்க காசு டோக்கனுடன் சிக்கிய "புல்லட்"
நாமக்கல் அதிமுக பிரமுகர் வாக்காளர்களுக்கு பணம் தர முயன்றுள்ளார்
நாமக்கல்: நாமக்கல்லில் புல்லட்டில் தங்க காசு டோக்கனுடன் வந்த அதிமுக பிரமுகரை பொதுமக்களே சுற்றி வளைத்துள்ளனர்.. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
வழக்கமாக தேர்தல் சமயத்தில், வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுப்பது நடக்கும்.. ஆனால், இது படுரகசியமாக செய்யப்படும்.. காதும் காதும் வைத்த மாதிரி நடத்தி முடிப்பார்கள்..
ஆனால், இப்போது அப்படி எல்லாம் இல்லை.. ஓபனாகவே வாக்காளர்களுக்கு பணம் தருவது நடக்கிறது.. அல்லது காசு எங்கே என்று வேட்பாளர்களே, வாக்காளர்கள் வாய் திறந்து கேட்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இது தற்போது எல்லை மீறி போராட்டம் நடத்தும் அளவுக்கும் சென்றுவிட்டது உச்சக்கட்ட அதிர்ச்சியே.

பிரச்சனை
ஊர் பிரச்சனைக்காக, மக்கள் நல பிரச்சனைக்காக, போராட்டம், மறியல் நடத்தப்பட்டதைதான் இந்த தமிழ்நாடு கண்டு வந்துள்ளது.. ஆனால், ஓட்டுப்போட காசு தரவில்லை என்று சொல்லி போராட்டம் நடத்திய அதிசயம் இந்த நாமக்கல்லில் நடந்துள்ளது.. ராசிபுரம் டூ புதுப்பட்டி சாலையிலுள்ள பட்டணம் பேரூராட்சியில், 50-க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். எங்க ஊர்ல அதிமுக தரப்பில் கொஞ்சம் பேருக்குதான் பணம் தந்தாங்க.. ஆனால், எங்களுக்கு தராம ஏமாத்திட்டாங்க என்று சொல்லி போராட்டம் செய்தனர்.

மறியல்
"ஓட்டுக்கு பணம் இப்படி தர்றதும் தப்பு. தப்பு. அதை நீங்க வாங்குறதும் தப்பு... அதைவிட, எங்களுக்கு பணம் தரலைன்னு போராடுறது அதைவிட ரொம்ப தப்பு என்று மறியல் செய்தவர்களிடம் போலீசார் அறிவுரை செய்த சம்பவமும் நடந்தது... அந்த வகையில் நேற்றைய தினம் நாமக்கல் பெரும் பரபரப்பை தந்த நிலையில், இதே நாமக்கல்லில் மற்றொரு சம்பவம் இன்று நடந்துள்ளது.

பாஸ்கர்
பொதுமக்களுக்கு ஓட்டுப்போட தங்க காசு மற்றும் டோக்கனுடன் வந்துள்ளார் ஒரு அதிமுக புள்ளி.. அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்துள்ளனர் இதே நாமக்கல் பகுதி மக்கள்..! நாமக்கலில் அதிமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ பாஸ்கர் மீண்டும் போட்டியிடுகிறார்... இவருக்காகத்தான் இந்த காரியத்தை அவரது ஆதரவாளர் செய்துள்ளதாக தெரிகிறது.. அதிமுக தரும் டோக்கன்களை வாங்கக் கூடாது, அது செல்லாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது..!

அதிமுக புள்ளி
அத்துடன் அது தொடர்பாக தீவிர சோதனையும் நடத்தி வருவதாக கூறியுள்ளது... இதெல்லாம் தெரிந்துதான், அதிமுக புள்ளி, காசை எடுத்து கொண்டு மக்களை சந்தித்துள்ளார்.. புல்லட்டில் தங்க காசுடன் வந்துள்ளார்.. வாக்காளர்களுக்கு டோக்கனையும் தர முன்வந்துள்ளார்.

பறிமுதல்
இது தெரிந்த அந்த பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிமுக பிரமுகரை சுற்றி வளைத்தனர்.. இதனால் பதறி போன அதிமுக புள்ளி, புல்லட்டையும், டோக்கனையும் அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓட்டம் பிடித்தார்.. இதையடுத்து, அவரது புல்லட் பறிமுதல் செய்யப்பட்டது.. தேர்தல் சமயத்தில் பாஸ்கர் தரப்பில் இவ்வாறு செய்ததால் அது தொடர்பான போலீஸ் விசாரணையும் நடந்து வருகிறது. மேலும், அந்த பகுதி மக்கள் டோக்கனை வாங்காமல் கிழித்து போட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications