கொல்லிமலை அமுதாவுக்கு கிடைத்தது ஜாமீன்.. 5 முறை நிராகரித்து.. 6வது முறையாக வழங்கியது கோர்ட்
குழந்தை கடத்தல் வழக்கில் நர்ஸ் அமுதா உட்பட 4 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
நாமக்கல்: கொல்லி மலை நர்ஸ் அமுதாவுக்கு ஒருவழியாக கோர்ட் ஜாமீன் தந்துள்ளது.. 5 முறை ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், இப்போது நாமக்கல் கோர்ட் ஜாமீன் தந்துள்ளது.
நர்ஸாக இருந்து 2012-ல் ரிடையர் ஆனவர் அமுதா. காட்டூர் காட்டுக்கொட்டாய் வள்ளியம்மாள் நகரைச் சேர்ந்தவர். குழந்தைகளை திருட்டுத்தனமாக விற்பதுதான் இவரது தொழில்.

கறுப்பு, சிவப்பு நிற குழந்தைகளுக்கு ஏற்றபடி ரேட் பேசி விற்று வந்திருக்கிறார். இதற்கு லட்சக்கணக்கில் பணத்தையும் பெற்றிருக்கிறார். இப்படி ரேட் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகமே அதிர்ந்து போனது.
இதுசம்பந்தமாக அமுதாவையும், அவருக்கு உதவியாக இருந்த கணவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணையும் நடத்தி சேலம் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கு உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கும் மாறியது. அப்போதுதான் திடுக் தகவல்கள் எல்லாம் வெளியானது. மொத்தமாக இந்த வழக்கில் கொல்லிமலையில் வசித்து வரும் பழங்குடி மக்களின் வறுமையை குறிவைத்துதான் குழந்தை விற்பனை நடந்து வந்திருக்கிறது என்பதும், 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
இது சம்பந்தமான வழக்கும், நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நர்ஸ் அமுதா உட்பட எல்லாருமே ஜாமீன் கேட்டனர். ஒவ்வொரு முறை ஜாமீன் கேட்கும்போதெல்லாம் கோர்ட் அதை மறுத்துவிட்டது.
எனினும் அமுதா, அவர் கணவர் ரவிச்சந்திரன், முருகேசன் உள்ளிட்டோர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில், அமுதா, ரவிச்சந்திரன், புரோக்கர் லீலா, ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் ஆகிய 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications