கழுத்தில் தங்க நகை.. நாமக்கல் தீபாவிடம் சபலத்தில் வீழ்ந்த 11 பேர்! பெண் புரோக்கரால் ஒரு உசுரே போச்சு
நாமக்கல்: திருமணம் செய்து வைப்பதாக கூறி ஏமாற்றுவோர் மீது, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் எச்சரித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இத்தகைய எச்சரிக்கையை எஸ்பி விடுத்துள்ளார்.. என்ன நடந்தது நாமக்கல் மாவட்டத்தில்?
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர் பாளையம் அருகே உள்ளது வடகரையாத்தூர் என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் சிவசண்முகம்... இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்தவர்.. 2வது திருமணத்துக்காக பெண் தேடி வந்தார்.

2வது திருமணம்
அப்போதுதான், 45 வயது தமிழ்ச்செல்வி என்ற பெண் புரோக்கர் அறிமுகமானார். இவர் மூலம் மதுரையை சேர்ந்த பெண் புரோக்கர்கள் நாராயணன் என்கிற சங்கர், வேல்முருகன், முத்துலட்சுமி,கஸ்தூரி, பாண்டி ஆகியோர் சிவசண்முகத்திற்கு அறிமுகமானார்கள்.
2வது திருமணத்துக்கு பெண் பார்த்து தருவதற்கு தங்களுக்கு ரூ.4 லட்சம் புரோக்கர் கமிஷன் கேட்டுள்ளனர்.. அதற்கு ஒப்புக் கொண்ட சிவசண்முகம், ரூ.1.20 லட்சம் அட்வான்ஸ் தந்தார்..
உடனே அனைத்து பெண் புரோக்கர்களும் சேர்ந்து, விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டி பகுதியை சேர்ந்த தீபா என்ற 24 வயது பெண்ணை காண்பித்து, 2-வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். அத்துடன், கடந்த 7-ம் தேதி மதுரை மாட்டுத்தாவணியிலுள்ள கோவிலில் இந்த திருமணத்தையும் நடத்தி வைத்தனர்.
அதிர்ச்சியில் சிவசண்முகம்
இதையடுத்து, சிவசண்முகம் புதுமனைவி தீபாவுடன் சொந்த ஊரான வடகரையாத்தூருக்கு வந்து சேர்ந்தார்.. அங்கு ஒருநாள் இருவரும் அங்கேயே தங்கினார்கள். மறுநாள் 9ம் தேதி தீபாவை காணவில்லை..
சிவசண்முகம் போன் செய்து பார்த்தால், செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. அப்போதுதான், வீட்டிலிருந்த நகை, வெள்ளி,கொலுசு, பட்டுப்புடவை உள்ளிட்ட பொருட்களும் மாயமாகியிருப்பதை சிவசண்முகம் கவனித்தார். இதனால் பெண் புரோக்கர்களுக்கு போன் செய்தால், அனைவரது செல்போனும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.
அப்போதுதான், தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.. எல்லா பெண்களும் சேர்ந்து தன்னை ஏமாற்றிவிட்டார்களே என்றே அவமானத்தையும் சிவசுப்பிரமணியத்தால் தாங்க முடியவில்லை.. இந்த விரக்தியிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாக்குமூலம் தந்த பெண்கள்
இதுகுறித்து நல்லூர் போலீசில் சிவசண்முகம் உறவின் புகார் செய்ததன் பேரில், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர் .. புதுமணப்பெண் தீபா உள்ளிட்ட பெண் புரோக்கர்களை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது.
இறுதியில், தமிழ்ச்செல்வி (45) திருச்சியை சேர்ந்த நாராயணன் என்கிற சங்கர் (54) தூத்துக்குடி புதூர் பகுதியை சேர்ந்த வேல்முருகன் (55) திருப்புவனம் அருகே கீழடியை சேந்த திருத்தணி என்பவரது மனைவி முத்துலட்சுமி (45) சிவகாசியை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மனைவி கஸ்தூரி பாண்டி (பாண்டி (38) மற்றும் தீபா 6 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.. அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, பல பகீர் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
தீபா பரபரப்பு
தீபாவின் உண்மையான பெயர் ஜோதிமணி. மதுரை பட்டத்து பகுதியை சேர்ந்தவர்.. திருமணம் செய்து புதுமனைவியாக 3 நாட்கள் நடிப்பதற்கு 30 ஆயிரம் பெற்றுள்ளார்.. சிவசண்முகம் போல, மொத்தம் 11க்கும் மேற்பட்டவர்களை தீபா திருமணம் செய்து,, அவர்களிடமிருந்து நகை, பணத்துடன் தப்பியிருக்கிறாராம்.
ஜோதிலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்களாம். இப்போது 6 பெண்களுமே சேலம் ஜெயிலில் உள்ளனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுததி வருகிறது.












Click it and Unblock the Notifications