Home Loan: கழுத்தை நெரித்த கடன்.. 3 மகள்களை வெட்டிக் கொன்று தந்தை தற்கொலை.. நாமக்கல்லில் அதிர்ச்சி
நாமக்கல்: நாமக்கல் அருகே வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை கட்ட முடியாததால் 3 மகள்களைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த வீடு என்பது ஒவ்வொருவருக்கும் கனவு. அந்த கனவை நிறைவேற்றுவதற்காக பலரும் வீடு வாங்குவதற்கு, கட்டுவதற்கு என வீட்டுக் கடனை வாங்குகின்றனர். குறைந்த வட்டியில் கிடைக்கும் கடன் என்றால் அது வீட்டுக் கடன் தான். ஆனால், பெரும் தொகை கடனாக வாங்கும்போது அதற்கான வட்டியும் அதிகளவில் இருக்கும். இதனால், சிலர் கடும் சிரமத்தில் சிக்கிக் கொள்ளும் நிலையும் உருவாகிறது.

இந்நிலையில், நாமக்கல் அருகே வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை கட்ட முடியாததால் 3 மகள்களைக் கொன்று விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (36). விவசாயியான இவருக்கு மனைவி, பிரக்திஷா ஸ்ரீ (9), ரித்திகா ஸ்ரீ (7), தேவஸ்ரீ (3) ஆகிய 3 மகள்களும் , மகன் ஒருவரும் உள்ளார்.
கோவிந்தராஜ் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், வீட்டுக் கடனை செலுத்த முடியாததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து, கோவிந்தசாமி தனது மனைவி மற்றும் மகனை வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார். பின்னர், 3 மகள்களையும் வெட்டிக் கொலை செய்ததோடு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார்.
வீட்டுக் கடனை திரும்ப செலுத்த முடியாததால் 3 மகள்களைக் கொன்று விவசாயி கோவிந்தசாமியும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications