ஏடிஎம் கொள்ளையர்களின் போட்டோ வெளியீடு.. சுற்றி வளைத்த 4 மாநில போலீஸ்.. நாமக்கல் எஸ்பி பரபர தகவல்!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ரூபாய் 67 லட்சம் பணத்தை கொள்ளையடித்து வந்த கண்டெய்னருடன் பிடிபட்ட ஏடிஎம் கொள்ளையர்களின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஏடிஎம் கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஜூமாதீன் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. மூன்று மாநில காவல் துறையினர் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக நாமக்கல் எஸ்.பி ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி ஒன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாலையில் வரும் வழியெல்லாம் வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. அதோடு அந்த கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் லாரியை நீண்ட தூரம் விரட்டிச் சென்று பிடித்து நிறுத்தினர். அப்போது லாரியின் உள்ளே ஆயுதங்களுடன் சிலர் இருந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கண்டெய்னர் லாரியை திறக்கும் போது உள்ளே ஆயுதங்களுடன் இருந்த கொள்ளை கும்பல் போலீசாரை தாக்கியதால் துப்பாக்கிசூடு நடத்தி கொள்ளையர்களை போலீசார் பிடித்துள்ளனர். போலீசார் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் கொள்ளைக் கும்பலில் இருந்த ஒருவர் ஜூமாதீன் என்பவர் உயிரிழந்தார். ராஜஸ்தானை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் கண்டெய்னர் லாரிக்குள் கட்டுக்கட்டாக பணம் மற்றும் பதிவு எண் இல்லாத ஹுண்டாய் கிரெட்டா கார் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையால் கைப்பற்றப்பட்ட கண்டெய்னரில் இருந்து மொத்தமாக 67 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி உமா, நாமக்கல் எஸ்.பி. ராஜேஸ் கண்ணா உள்ளிட்டோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்டு கைதான கொள்ளையர்கள் 5 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்ற போலீசார், அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணா கூறுகையில், "இந்தக் கொள்ளையர்கள் பெரிய கும்பலாகச் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது. இந்தக் கும்பலில் சுமார் 70 பேர் வரை இருக்கலாம். மேலும், இதே கும்பல் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏடிஎம் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுடைய இருப்பிடம், சொத்துகள், மூளையாகச் செயல்படுபவர் யார் என்பது உள்ளிட்ட தகவல்களை எல்லாம் விசாரித்து வருகிறோம். இந்தக் கொள்ளையர்களில் இருவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர். கொள்ளையடிக்க கூகுள் மேப் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர்., கொள்ளையடித்து முடிக்க வெறும் 15 நிமிடங்களை மட்டுமே எடுத்துக்கொள்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொள்ளையர்கள் 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் தனித்தனியே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாநில காவல் துறையினர் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். ஒடிசா காவல்துறை இவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக விரைந்துள்ளனர். ஏடிஎம் கொள்ளையர்களின் புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications