நாமக்கல் காவல் நிலையத்தில் இரவு பணிக்கு வந்த பெண் எஸ்ஐ.. அறையில் இருந்ததை பார்த்து ஆடிப்போன போலீஸ்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கல் காவலர்களை பற்றிய பிம்பங்கள் இங்கு வேறு மாதிரியாக கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நடைமுறையில் பல காவலர்கள், உடல் நலனை பற்றி கவலைப்படாமல் உயர் அதிகாரிகள் சொல்படி வேலை செய்வது தான் நடைமுறையில் இருக்கிறது. விடுமுறை இல்லாதது, உடனே குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற அழுத்தம், குற்றவாளிகளின் செயல்பாடுகளால் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சனை இளம் வயதிலேயே அவர்களுக்கு எமனாகிவிடுகிறது. நாமக்கல் அருகே காவல் நிலையத்தில் இரவு பணிக்கு வந்த இடத்தில் பெண் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் .. திரும்ப எழவே இல்லை.

காவலர்கள் குறித்து கடந்த மூன்று நாட்களாகவே விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. காவலர்களின் செயல்பாடுகள் விமர்சிக்கப்படுகின்றன. காவலர்கள் மற்றும் ஏன் நீதிபதிகள் கூட விமர்சனங்களுக்கு அப்பார்பட்வர்கள் இல்லை.. இதுதான் இன்றைக்கு சமூக ஊடங்களில் எதார்த்தமாக உள்ளது. அதேநேரம் காவலர்கள் பற்றி பேசும் போது, அவர்களின் அதிகாரங்கள் குறித்தே விமர்சிக்கப்படுகிறது. அவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்கள் பற்றி விவாதங்கள் பெரிய அளவில் எழுவது இல்லை..

Namakkal What happened to the female sub-inspector who came to police station for night duty

காவலர்கள் உடல் நிலை

காவலர்கள் பலர் விடுமுறை இல்லாமல் பணியாற்றுகிறார்கள். சட்டம் ஒழுங்கு விவாகரத்தில் குற்றவாளிகளை கண்டிப்பதில் தொடங்கி, உயர் அதிகாரிகள் அழுத்தம் வரை பல உளவியல் சிக்கல்களை சந்திக்கிறார்கள். அதன் காரணமாக விரைவாகே உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுகிறார்கள்.பலர் 50 வயதை கடக்கும்போது ஏராளமான உடல் உபாதைகளுடன் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மாரடைப்பு ஏற்படுவது உடல் நலக்குறைவால் இறக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.

நாமக்கல் சப் இன்ஸ்பெக்டர்

நாமக்கல் மாவட்டம் வெள்ளக்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவருடைய மனைவி காமாட்சிக்கு 51 வயது ஆகிறது. இவர் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
நேற்று முன்தினம் காமாட்சி இரவு பணிக்கு சென்றார். பின்னர் அவர் சக போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டார். நள்ளிரவில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறத. இதுகுறித்து அவர் சக காவலர்களிடம் தெரிவித்துவிட்டு போலீஸ் நிலைய மாடியில் உள்ள ஓய்வறைக்கு சென்றுள்ளார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் அறையில் இருந்து வெளியே வரவில்லை.

பேளுக்குறிச்சி

இதனால் பேளுக்குறிச்சி காவல் நிலைய போலீசார் அந்த அறைக்கு சென்று கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு காமாட்சி இறந்து கிடந்தார். இதை பார்த்து போலீசார் ஆடிப்போனார்கள். பின்னர் அவரது உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

நாமக்கல் எஸ்பி வருகை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணா மருத்துவமனைக்கு நேரில் வந்து காமாட்சி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் போலீசார் பலர் அங்கு வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இரவு பணிக்கு வந்த பெண் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+